கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்

--

சென்னை:

யிலாப்பூரில் கடை வைத்திருப்பவர் சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்ப்பில் இருந்த இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த செய்தி அனைத்து பத்திரிகைக்கள், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டது. இதனால், மனமுடைந்த சுரேஷ், மீண்டும் தான் தொழில் நடத்தமுடியுமா? என்று கவலை அடைந்தார். அப்படியே சிக்கிச்சைக்கு பின்னர் கடையைத் திறந்தாலும், பழையபடி வாடிக்கையாளர்கள் வருவார்களா? என்ற அச்சம் அவர் மனதில் இருந்தது.

இந்நிலையில் நேற்று அவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடையை திறந்த சுரேஷ்க்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவரது கடைக்கு பழைய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி புதிய வாடிக்கையாளர்களும் வர தொடங்கினர். மேலும் கடை வருபவர்கள் அனைவரும் சுரேஷிடம் சகஜமாக பழகியதுடன், அவரது உடல் நிலைக் குறித்தும் கேட்டறிந்ததால் சுரேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இதுக்குறித்து சுரேஷ் தெரிவிக்கையில், சென்னையில் கடை வைத்திருக்கும் பலருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் முதல் ஆளாக பாதிப்புக்கு உள்ளானதால், எனது பெயர் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நான் வருத்தப்பட்டேன். நாங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் கவனமாகவே இருக்கிறோம் என்பதை எங்கள் வாடிக்கையாளர்கள் நன்றாகத் தெரிந்துக் கொண்டிருக்கின்றனர் ”என்று சுரேஷ் கேட்கிறார். எனது மனைவி கலராணி மற்றும் குழந்தைகள் பிரணவ் மற்றும் பிரியா ஆகியோரும், சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தனது பெயரை வெளியிட்டதால், ஊடங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சுரேஷுக்கு, வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் குறித்து அவரது தந்தை தெரிவிக்கையில், இந்த கடை இங்கு 35 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான் நடத்தி வந்த இந்த கடையை தொடர்ந்து எனது மகனும் நடத்தி வருகிறான். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சம்பாதித்த நல்ல பெயர் தான் இன்னும் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்ல காரணமாக இருக்கிறது என்றுக் கூறினார்.

எங்கள் வாடிக்கையாளராக 80 வயதான பெண் ஒருவர் உள்ளார். அவர் நேற்று எங்களை சந்திக்க வந்தார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்தேன். என் பிரார்த்தனை உண்மையாகி விட்டது என்று கண்ணீர் வழிய கூறியதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி செலுத்தும் வகையில், தன் கடையை மீண்டும் திறந்த அன்றைக்கு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.