பெங்களூரு: கடந்த 2008ம் ஆண்டு டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கவே, மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்றோம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன் அனில் கும்ளே.

கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த சிட்னி டெஸ்ட் பல சர்ச்சைகளுக்கு காரணமான டெஸ்டாக மாறியது. இப்போட்டியில், விண்டீஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர் சில தவறான தீர்ப்புகளை இந்தியாவுக்கு எதிராக அளித்தார்.

மேலும், ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸை, இந்தியாவின் ஹர்பஜன்சிங் குரங்கு என்று திட்டியதாகவும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், ஹர்பஜன் விவகாரம் மற்றும் நடுவரின் மோசமான தீர்ப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து, தொடரிலிருந்து பாதியி‍லேயே விலகி நாடு திரும்ப இந்திய அணி முடிவு செய்ததாக அப்போது தகவலகள் வெளியாகின. ஆனால், இந்திய அணி முழு தொடரிலும் பங்கேற்றது.

இந்நிலையில், “நாங்கள் நாடு திரும்பவே முடிவு செய்தோம். ஆனால், தொடரை வென்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கவே தொடர்ந்து பங்கேற்றோம்” என்றுள்ளார் அன்றைய கேப்டன் அனில் கும்ளே.