அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்! முதல் மனுதாரர் அன்சாரியின் மகன்

டெல்லி:

ர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தின் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று இந்த வழக்கில் முக்கிய மனுதாரரும், முதல் மனுதாரருமான  ஹாசிம் அன்சாரியின் மகன் இப்ராகிம்  அன்சாரி தெரிவித்து உள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு இந்து, இஸ்லாமிய அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது. அதில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. அது போல் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு குறித்து முக்கிய மனுதாரரான  ஹாசிம் அன்சாரியின் மகன், இக்பால் அன்சாரி கூறுகையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், “எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது செய்தி என்னவென்றால், நீங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு வரவேற்க வேண்டும், மேலும் எந்தவொரு வன்முறையையும் தூண்டக்கூடாது” என்று கூறினார்.

அயோத்தி வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமானவரான முகமது ஹாசிம்  இக்பால் அன்சாரியின்  மகன் ஆவார். தந்தை 2016-ல் உயிரிழந்த பிறகு இந்த வழக்கை மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார். டைலராக இருந்த ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி அருகே வசித்து வந்தார். வழக்கில் முதல் மனுதாரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.