என் வீடுகளில் ரெய்டு நடத்த இருக்கும் வருமான வரித்துறையினரை வரவேற்கின்றேன்: ப.சிதம்பரம்

சென்னை:

சென்னை மற்றும் கண்டனூரில் உள்ள என் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. அவர்களை வரவேற்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் எதையும் மறைத்து வைக்கவில்லை என்று வருமான வரித்துறையினருக்கு தெரியும்.

ஏற்கெனவே ஒரு முறை வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தியும் எங்கள் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

பாஜக அரசின் வரம்பு மீறும் செயலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள். சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உள்ள வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். அவர்களை வரவேற்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Raid, ப.சிதம்பரம், ரெய்டு:
-=-