பீஜிங்:  உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது  உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம் இருந்து  இந்த வைரஸ் பரவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, சமீபத்தில் அங்கு வெளியான 2017ம் ஆண்டைய வீடியோ உறுதி செய்துள்ளது.

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது.  வுகானில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.  அமெரிக்கா உள்பட உலக நாடுகள், கொரோனா பரவ சீனாதான் காரணமா என்று  குற்றம்சாட்டி வந்த நிலையில், அதை மறுத்து வந்த சீன அரசு,  தற்போது, ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வுகானில் இருந்துதான் பரவியதா என்பது  குறித்துஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், சுமார் ஓராண்டுக்கு பிறகு,  தற்போதுதான், உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்ய சீனா அனுமதி வழங்கியது. அதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் மருத்துவ வல்லுநர்கள்,  அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழு சீனாவில் ஆய்வு நடத்த கடந்த வாரம் வுஹான் நகருக்கு சென்றுள்ளது.

கடந்த 14ந்தேதி முதல், அங்குள்ள ஆய்வகங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது, அங்கு கிடைத்த 2017ம் ஆண்டைய வீடியோவில் உள்ள காட்சிகள், சீனாவில் இருந்தான் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. அந்த வீடியோல்,   சீன விஞ்ஞானிகள், வுகான் பகுதியில் உள்ள  ஒரு குகையில் மாதிரிகளை சேகரிக்கும் போது  கொரோனா வைரஸ் நோயினால்,  பாதிக்கப்பட்ட வவ்வால்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சிலரை வவ்வால்கள் கடித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், கொரோனா தொற்றுக்கு ஆளான அவர்கள் மூலமே மற்றவர்களுக்கு தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதை வுகான் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.  அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோ கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானதாகவும், தற்போது மீண்டும் வைரலாகி வருவதாகவும்  கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) நிறுவனத்தைச் சேர்ந்த  விஞ்ஞானிகள் கையுறைகள் மற்றும் முகமூடிகள் இல்லாமல், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு விதிகளை மீறி,  நேரடியாக  ஆய்வகத்தில் வைரஸ் தொடர்பான ஆய்வுகளை நடத்தியது தெரிய வந்துள்ளது.

சோதனையின்போது, ஒரு விஞ்ஞானி தனது வெறும் கைகளால் ஒரு வவ்வாலை பிடித்து ஆய்வு செய்வதும், அப்போது,  மற்றொரு ஆய்வாளர், வவ்வாலின் கூர்மையான பற்கள் (Fangs) தனது கையில் அணியப்பட்ட  கையுறைகள் வழியாக ‘ஊசி போல’ குத்தியதாகவும் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ சம்பந்தமான தகவல்கள் உலக சுகாதாரத்துறை நிறுவனத்திடம் கிடைத்துள்ளது. இதனால், வுகான் விஞ்ஞானிகள்தான் முதன்முதலாக  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள் மூலமே கொரோனா வைரஸ் வுகான் மாநிலத்தில் பரவி இருக்கலாம் என்றும், அதைத் தொடர்ந்தே உலக நாடுகளுக்கு பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.