சென்னை:

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர்  ராமதாஸ் கூறி உள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால்,மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக, பாமக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம்  போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மசேதாவை நிறைவேற்றி உள்ளது. மாநிலங்களவையில் மசோதாவுக்க  125 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது குடியுரிமை சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டு உள்ளது.

மசோதாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக, பாமக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  ராமதாஸ் தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக  பாஜகவின் மக்கள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன.

இந்த  நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என்று கூறியவர், . கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதாரித்துதான் ஆக வேண்டும் என்றார்.

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்.அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான்  பா ம.கவின் நிலைப்பாடு என்று கூறியவர், நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை’ என்றும் கூறினார்.