மூத்த நிர்வாகிகள் அறிவுரைபடி திமுக ஐடி பிரிவு உருவாக்கப்படும்! தியாகராஜன்

சென்னை,

மூத்த நிர்வாகிகள் அறிவுரைகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி திமுக ஐடிபிரிவு உருவாக்கப்படும் என்று அதன் புதிய தலைவரான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ( ஐ.டி. விங்) அமைப்பின் புதிய பொறுப்பாளராக  மதுரை மத்திய தாகுதி சட்டமமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகனுமான பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரு நியமனம் காரணமாக சமூக வலைதளங்களில் திமுகவின் பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவர்  கூறியதாவது,

கேள்வி: ஐடிவிங்கின் புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள தங்களின் முதல் திட்டம் என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்ப அணி மூலம் கட்சியையும், கட்சி நிர்வாகத்தையும் பலப்படுத்துவதே எனது முதல் நோக்கம், அதன் காரணமாக,  எல்லா தரப்பு மக்களிடமும் கட்சி மற்றும் இயக்கத்தின் கொள்கை சென்று சேரும் வகையில் உருவாக்கப்படும். சமூகவலைதளம், தேர்தல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

கேள்வி: திராவிட இயக்கங்களினால் பயன்பெற்ற இளைஞர்களில், முதல் தலைமுறையினரே, திமுகமீது விமர்சனங்ள்,  குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளை சமூவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.  தாங்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், சமுக வலைதளங்களில் வெளியாகும் திமுக மீதான குற்றச்சாட்டை  எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்.

பதில்: திராவிட இயக்கங்களினால் பலன்பெற்ற இளைஞர்களே விமர்சித்து வருகின்றனர்.  மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்ற சூழ்நிலை  உருவாகவில்லை என்றால்  அன்புமணி ராமதாஸ்,  தமிழிசை சவுந்திரராஜன் போன்றவர்கள் மருத்துவமே படித்திருக்கவே முடியாது.

இவர்களே திராவிட இயக்கங்களை விமர்சிக்கும்போது, இளைஞர்களின் விமர்சனத்திற்கு எப்படி தடை போட முடியும். திமுகவின் தகவல் தொழில்நுட்பு பிரிவு புணரமைப்பதின் வாயிலாக. இளைஞர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில்,  திராவிட இயக்கங்களின் வரலாறு மற்றும் அவற்ரால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மை குறித்த தகவல்கள் பதிவேற்றப்படும்.

கேள்வி: திமுகவின் தலைவர், கலைஞரும்  முக ஸ்டாலினும் பல ஆண்டுகளாக சமுக வலை தளங்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதிமுகவில் ஐடி விங் தொடங்கப்பட்டு, சமக வலைதளங்களில் பரப்புவதன் மூலம் ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டனர். ஆனால், திமுகவோ இதுபோன்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறதே ஏன்?

பதில்: தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகளும், அதிமுகவினர் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கும்  வெவ்வேறானவை.

அ.தி.மு.க.வின் இணையதள பிரிவில் வெறும் சமூக வலைதள செயல்பாடுகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால்,  திமுகவின் தொழில்நுட்ப பிரிவி இணையதளத்தில், திமுகவின்  அறிவிப்பானது கட்சியின் இணையதளம் உட்பட அனைத்தையும் உள் கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவது ஆகும்.

கேள்வி: சமூகவலைதளங்களில் திமுகவின்ர்  அதிக அளவில் பங்கெடுத்துள்ளனர். மேலும் கட்சிக்கு ஆலோசனை சென்ற பெயரில், சில விமர்சனங்களை பதிவேற்றி வருகின்றனர். இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பதில்:  திமுக ஜனநாயகமும், இயக்கப்பற்றும் அதிகம் உள்ள கட்சி. கட்சி நிர்வாகிகளை அடிமைகளாக எப்போதும் பார்ப்பதில்லை.  கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்டுப்படாடுடன் செயல்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால்,  கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது, பாஜக அக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஒரு மையத்தை ஏற்படுத்தி,  அதன் மூலம் சரியான நேரத்தில் சில தகவல்கள் பொது மக்களிடம் சரியாக சென்று சேர்ந்தன. அதே போல் ‘ கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சரியான நேரத்தில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவோம்.

கேள்வி: இணையதள செயல்பாடுகளில்  முக்கியமானது ஒருங்கிணைப்பு. இந்த சவாலான பணியை எப்படி மேற்கொள்வீர்கள்?

பதில்: ஒருங்கிணைப்பு பணி என்பது இணையதள பிரிவில் நிர்வாக ரீதியில் அவ்வளவு சுலபமானதல்ல. கருத்தளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

ஆனால் திமுக தலைவர்களின் முடிவினால் உருவாக்கப்பட்ட துறை என்பதால்,  எல்லோருடைய ஒத்துழைப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் தனிப்பட்ட முறையல் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டேன் என்றும்,  மூத்த  நிர்வாகிகளின்  அறிவுரைகள், ஆலோசனைகள்  பெற்று, விவாதித்து அதன்பிறகுதான் எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படும்.

கட்சி நிர்வாகிகள்  அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதின் மூலம் இயக்கத்தின் குறிக்கோளை விரைவில் அடைய முயற்சி செய்வோம் என்ற  நம்பிக்கை இருக்கிறது.

மேலும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதை என் அரசியல் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். அதனை நிறைவேற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: PTR Palanivelrajan Thiagarajan, we will be created according to the DMK senior leader instructions, மூத்த நிர்வாகிகள் அறிவுரைகள்படி திமுக ஐடிபிரிவு உருவாக்கப்படும்! தியாகராஜன்
-=-