நாங்கள் வரத் தயார்: 64 எம் எல் ஏக்கள் ஓ.பி.எஸ்-க்கு தூது!  

சிவகாசி:

“சசிகலாவின் பினாமி ஆட்சியை ஆதரிக்கும் 64 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்” என சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், “ அ.தி.மு.க., வின் அடிமட்ட தொண்டன் எவரும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் இப்போது அ.தி.மு.க., வில் உள்ளனர்.

கட்சியை நாசமாக்கும் வேலையில் அவர்கள் இறங்கியுள்ளனர். கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.க்களின் வாயை பணத்தால் அடைத்தனர். ஆனால் அவர்களில் 64 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தை எண்ணி மனசாட்சி உறுத்துவதாக தொடர்ந்து எங்களிடம் அலைபேசியில் பேசி வருகின்றனர்.

அவர்கள் விரைவில் பன்னீர்செல்வத்திடம் இணைய தயாராக உள்ளனர். விரைவில் கட்சியை சட்டரீதியாக கைப்பற்றுவோம். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.