உச்ச நீதி மன்ற தடையை பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு மூன்றாவது நாளாக நடந்துவருகிறது.

இதனால், இந்தத் தடைக்கு காரணமான பீட்டா அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அமைப்பின்

இது குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டா அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் நிகுன் சர்மா, ”தமிழகத்தில் தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.   மாநில நிர்வாகத்தின் உதவியோடு தான் இந்த போட்டிகள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து, இந்த சட்டவிரோத நிகழ்வுகள்  குறித்து முறையிட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல்துறை, கடுமையான நவடிக்கை எடுத்துவருவதாக தகவல் பரவி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை மிகக் கடுமையாக தாக்குவதாகவும் காவல் துறை மீது புகார் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசின் ஒத்துழைப்போடு  ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக பீட்டா குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசை குறிப்பாக முதல்வர் ஓ.பி.எஸ். அச்சபடுத்த உள்ளது என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இனி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது, மேலும் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.