பிரக்யா தாக்கூர் மன்னிப்பு கேட்கும் வரை அவையில் அமர விடமாட்டோம்! சசிதரூர்

டெல்லி:

பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மன்னிப்பு கேட்கும் வரை அவையில் அமர விடமாட்டோம், அவர்மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்து உள்ளார்.

க்களவையில் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், கோட்சே தேச பக்தர் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரக்யா தாக்கூர்  பேசியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பிரக்யா தாக்கூர் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறி, ஒத்திவைப்பு தீர்மானம் மீது விவாதிக்க அனுமதி மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், பிரக்யா தாக்கூர் மீது கண்டனம் தீர்மானம் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான  சசிதரூர் கூறி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர்,  பிரக்யா தாக்கூருக்கு தேர்தலில் டிக்கெட் கொடுத்தது பாஜகத்தான், அவர்கள் தான் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர் என்று தெரிவித்தவர்,  தற்போது, அவர் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்குகொள்ள மாட்டார் என்று அறிவித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியவர்,  பிரக்யா தாக்கூர்  மன்னிப்பு கேட்கும் வரை அவரை நாடாளுமன்றத்தில் அமர அனுமதிக்கக்கூடாது, அவர்மீது  நாங்கள் ஒரு கண்டன  தீர்மானத்தை கொண்டு வரவோம் என்று கூறினார்.