Random image

புடின் – டிரம்ப் விவாதிக்க உள்ள விவகாரங்கள்

வாஷிங்டன்

ஷ்ய அதிபர் புடினும் சிரியா, உக்ரைன் மற்றும் தேர்தல்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம்மை சந்தித்து இருவரும் வட கொரியா குறித்து விவாதித்தனர்.   அப்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.   வரும் ஜூலை 16 ஆம் தேதி அன்று ரஷ்ய அதிபர் புடின் மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளனர்.

இருவரும் சந்திக்கும் போது இரு நாட்டு விவகாரங்கள்மட்டும் இன்றி மற்ற உலக நாடுகள்குறித்தும் விவாதிப்பார்கள் என இருநாட்டு அரசுகளும்   கடந்த வியாழன் அன்று அறிவித்துள்ளன.   நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்

டிரம்ப் செய்தியாளர்களிடம், “நானும் ரஷ்ய அதிபர் புடினும் உக்ரைன் குறித்து பேச உள்ளோம்.  மற்றும் சிரியா விவகாரம் தேர்தல்கள் குறித்தும் பேச உள்ளோம்.   தேர்தல்களின் யாரும் புகுந்து குழப்பம் விளவிப்பதை நாங்கள் விரும்பவில்லை.  மற்ற நாட்டு விவகாரங்களும் எங்கள் பேச்சில் இடம் பெறும்.  முக்கியமாக அமைதி மற்றும் ஆயுத ஒழிப்பு குறித்து விவாதிக்கப் போகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடை குறித்த கேள்விக்கு, “ரஷ்யா எங்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறது என்பது தெரியாமல் தான் எந்த முடிவும் சொல்ல முடியாது.   அத்துடன் சிரியா விவகாரம் குறித்தும் பேச்சு வார்த்தையில் விவாதிக்க வேண்டி உள்ளது.” என கூறி உள்ளார்.