சென்னை:

ள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு இடையில் பல்வேறு தளர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு  பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்வெழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று  ஈரோடு மாவடட்ம் கோபிச்செட்டிப்பாளையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது, அவர்களின் அறிக்கையை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.