கோப்பையை வெல்ல இறுதிவரை போராடுவோம்: ஷேன் வாட்சன்

துபாய்: சென்னை அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும், கோப்பையை வெல்ல இறுதிவரை போராடுவோம் என்றுள்ளார் அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்.

அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்களில் 2வது இடத்திலுள்ள ரெய்னா இல்லாதது அணிக்குப் பெரிய பின்னடைவுதான். அதேசமயம், எங்கள் அணியில் முரளிவிஜய் போன்றவர்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்தமுறை அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். அவர் நல்ல திறமையான வீரர். ஹர்பஜன் சிங் இல்லாதது மற்றொரு இழப்பு. அவர், கடந்த சில தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், கொல்கத்தா அணியிலிருந்து வந்த பியூஸ் சாவ்லா, நிலைமையை சரிசெய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எப்படியாயினும், இந்தமுறை கோப்பையை வெல்வதற்கு இறுதிவரை போராடுவோம்” என்றார் வாட்சன்.

 

You may have missed