பாதிரியார் குரியகோஸ் மறைந்தாலும் போராட்டம் தொடரும் : கன்னியாஸ்திரியின் சகோதரி

திருவனந்தபுரம்

லாத்கார புகாரில் பிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் மறைந்தாலும் தங்கள் போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி கூறி உள்ளார்.

ஜலந்தர் மறை மாவட்டத்தில் பேராயராக உள்ள பிராங்கோ முல்லக்கல் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். அவரது புகாரை தேவாலயமும், காவல்துறையும் கண்டுக் கொள்ளததால் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் இறங்கினார்கள் அதை தொடர்ந்து பேராயர் கைது செய்யப்பட்டார்.

பிரான்கோ முலக்கல்

இந்த வழக்கில் பாதிரியார் குரியகோஸ் என்பவர் பேராயருக்கு எதிரான முக்கிய சாட்சியாக இருந்தார். குரியகோசும் ஜலந்தர் மறை மாவட்டத்தில் பணி புரிபவர் ஆவார். தற்போது பேராயர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவர் ஜாமீனி வெளி வந்த மிகச் சில நாட்களுக்குள் பாதிரியார் குரியகோஸ் மர்மமாக மரணம் அடைந்தார். இது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ள்து.

பாதிரியார் குரியகோஸ்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி, “மரணம் அடைந்த பாதிரியார் குரியகோஸ் ஜலந்தர் மறை மாவட்டத்தில் பணி புரிபவர் ஆவார். ஆகையால் அவருக்கு பேராயர் பிரான்கோ முலக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் தெரிந்துள்ளது. அவர் எனக்கும் என் சகோதரிக்கும் ஆசிரியராக இருந்தவர். ஆகவே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எனது சகோதரி அவரிடம் தெரிவித்து இருக்கலாம்.

எனவே இந்த வழக்கில் அனைத்தும் அறிந்தவர் என்பதால் குரியகோஸ் மரணம் சந்தேகத்தை அளிக்கிறது. பேராயரை எதிர்த்து போராடும் எங்களுக்கு பாதிரியார் மரணம் சிறிது பயத்தை அளிக்கிறது. எங்களுக்கு எச்சரிக்கை அளிக்கவே இந்த மரணத்தை யாரோ நிகழ்த்தி உள்ளனர். இருப்பினும் எங்கள் போராட்டத்தை நாங்கள் நிறுத்தப் போவதில்லை.” என தெரிவித்தார்.

ஏற்கனவே கன்னியாஸ்திரியின் சகோதரி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பேராயர் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.