முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் இருந்து பலர் இளம் வயதிலேயே ஒய்வு பெற்று விடுகின்றனர்.  அதன் பிறகு அவர்களுக்கு வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமானதாக உள்ளது.   இதனால் பலர் துன்புற்று வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அறிக்கையில், “காங்கிரஸ் கட்சி ந்மது முன்னாள் ராணுவ வீரர்கள் நமது நாட்டின் பெருமைக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என நினைக்கிறது.   அதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் பணியை தொடர்ந்து பயன்படுத்த எண்ணுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி தகுதி உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நேரடியாக அரசு ஆட்சியர் பதவிகளை அளிப்போம்.   அத்துடன் 40 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சிஆர்பிஎஃப் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.