மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்: புதிய தரைப்படை தளபதி

புதுடெல்லி: மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் இந்திய ராணுவம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார் புதிய தரைப்படை தலைமை தளபதி மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

தரைப்படை தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், முப்படைகளுக்குமாக சேர்த்து தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தரைப்படைத் தளபதியாக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் மனோஜ் முகுந்த்.

டெல்லியிலுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது, “நாட்டைக் காப்பதற்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. ஒரு தலைமைத் தளபதி என்ற முறையில், கடமையை செய்வதற்கான தைரியத்தை வழங்க வேண்டுமாய் நான் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும், மனித உரிமைகளை காக்கும் விஷயத்தில் இந்திய ராணுவம் கூடுதல் கவனம் செலுத்தும்” என்றார்.