மெல்போர்ன்: விராத் கோலி இல்லாத ரஹானேவின் இந்திய அணிக்கான எங்களின் நெருக்கடி அதிகமாக இருக்கும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணியில் விராத் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாதது பெரிய குறைபாடாகும். இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம். நாளையப் போட்டியில், வலுவான துவக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

புதிய கேப்டன் ரஹானேவிற்கு பெரியளவில் நெருக்கடி தருவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஒரு அணியிலிருந்து சிறந்த வீரர்கள் விலகும்போது, அந்த அணி பலவீனமாக மாறும் என்பது இயற்கையானதே! இந்திய அணியும் தற்போது அந்த நிலையை எட்டியுள்ளது” என்றுள்ளார் அவர்.

தனது மனைவியின் முதல் பிரசவத்திற்காக, முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிவிட்ட கேப்டன் விராத் கோலிக்கு பதிலாக, துணைக் கேப்டன் ரஹானே, எஞ்சிய 3 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு பதிலாக, சிராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.