சபரிமலை கோயில் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தேவசம் போர்டு தகவல்

டில்லி:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி என உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இது இந்து மக்களிடையே…. குறிப்பாக கேரள மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு மனு தாக்கல் செய்வோம் என்று சபரிமலை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்  கூறி உள்ளார்.

சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார்

கேரளாவில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செய;ல என்று கூறி, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு கூறியது.

இந்நிலையில்  தீர்ப்பு குறித்து சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார், “உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து, மற்ற மதத்தினரின் ஆதரவோடு  மறு பரிசீலனை மனு தாக்கல் செய்வோம்” என்றும் கூறி உள்ளார்..