சபரிமலைக்கு இளம்பெண்கள் வராமல் 60 நாட்கள் பாதுகாக்க போகிறோம் : ஐயப்ப தர்ம சேனா

--

பரிமலை

ரும் மண்டல பூஜை சமயத்தில் சபரிமலைக்கு இளம்பெண்கள் வராமல் பாதுகாக்க வேண்டும் என ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறி உள்ளார்.

வெகு நாட்களாக சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பது வழக்கமில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து அளிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என போராடி வருபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து இளம்பெண்கள் சபரிமலை வருவதை எதிர்த்து வரும் ஆர்வலரும் ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ராகுல் ஈஸ்வர், “இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிகவும் அரிதாக ஒரு மறுசீராய்வு மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணை முடியும் வரை இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்ல கேரள அர்சு இடைக்காமல தடை விதிக்க வேண்டும். நீதிமன்றம் தனது தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை எனினும் அர்சு முன்வந்து இந்த அறிவிப்பை அளிக்க வேண்டும்.

வரும் நவம்பர் 15ஆம் தேதி 10 மணியில் இருந்து ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இரவு 10 மணி வரை நங்கள் சபரிமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளொம். இதற்காக பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மாறி மாறி பணியில் ஈடுபட உள்ளனர். நாங்கள் எங்களுக்கு இந்தப் பணியை செய்ய ஆன்மிக பலம் அளிக்க வேண்டும் என பிரார்தனை செய்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.