பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்தக்கோரி தேர்தல்அதிகாரியை சந்திப்போம்! திருமாவளவன்

சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னவராதியில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு தினத்தன்று ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துபேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர்,  பொன் பரப்பியில் மறுதேர்தல் நடத்தகோரி  கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து முறையிட இருப்பதாக கூறினார்.

பொன்னமராவதி பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால்  இன்று பஸ்கள் ஓடவில்லை.  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதுபோல 144 தடை உத்தரவால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி