சபரிமலையில் பழைய வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் : பந்தள அரச் குடும்பம்

பரிமலை

பரிமலையில் பழைய வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என பந்தள அரச் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெகு நாட்களாக இளம்பெண்களை அனுமதிப்பது கிடையாது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதே நேரத்தில் பல பெண் ஆர்வலர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலைக்கு செல்ல ஆர்வம் தெரிவித்துள்ளனர். தீர்ப்புக்குப் பிறகு இருமுறை கோவில் திறக்கப்பட்டது. இருமுறையும் பக்தர்கள் போராட்டத்தால் இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பனின் வளர்ப்பு தந்தையான பந்தள அரச குடும்பத்தினர் இளம் பெண்கள் கோவிலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து அரச குடும்ப பிரதிநிதி, “சபரிமலைக் கோவிலின் பழைய வழக்கங்களை மாற்றுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

எனவே இளம்பெண்களை சன்னிதானம் வர அனுமதிக்க கூடாது. சபரிமலையில் எப்போதுமே இளம்பெண்களை அனுமதிக்கும் பழக்கம் கிடையாது. இதை நாங்கள் மாற்ற மாட்டோம். இந்த முடிவை நாங்கள் முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தையின் போது தெரிவித்துள்ளோம்” எனக் கூறி உள்ளார்.