மரத்தை வெட்டமாட்டோம்; கேள்வி கேட்பவரையே வெட்டுவோம்! ஊடகத்துறையினரை பகீரங்கமாக மிரட்டிய ராமதாஸ் (வீடியோ)

சென்னை:

மிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் பெயரில் வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் ராமதாஸ், தன்னை மரம்வெட்டி என்று அழைக்கும் ஊடகத்தினருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இனிமேல் மரத்தை வெட்ட மாட்டோம், கேள்வி கேட்பவரைத்தான் வெட்டுவோம் என்று பத்திரிகையாளர்களுக்கு பகிரங்கமாக  மிரட்டல் விடுத்ததர், அவரை விமர்சித்தால் அவர்களின் தலைகள் துண்டிக்கப்படும் என்ற வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு கடந்த  ஜூன் 22ம் தேதி கருத்தரங்கம் நடத்தியது. இதில் பாமக தலைவர்   ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை அநாகரீகமான முறையில் விமர்சித்தார். மேலும், செய்தியாளர் களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

வெறுப்பு அரசியல் என்ற தலைப்பிலான கருத்தரங்களில் ராமதாஸ் அருவறுக்கத் தக்க வகையில் பேசியது  ஊடகத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், விரக்தியாக உள்ள பாமக தலைவர் என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறி வருகிறார். தேர்தலுக்கு முன்பு அதிமுகவை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அந்தளவுக்கு கீழ்த்தரமாக ‘டயர் நக்கி’ என்று விளித்துபேசிய ராமதாஸ், மீண்டும் அவர்களுடனேயே கூட்டணி அமைத்தது பொதுமக்களுக்கு பிடிக்க வில்லை. இதன் காரணமாக பாமக படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், அதிமுக ஏற்கனவே உறுதிமொழி அளித்தபடி  தனது மகனுக்கு அதிமுக ராஜ்யசபா சீட் தருமா அல்லது அவர்களும் மக்களைப்போல தங்களை புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஊடகத்துறையினர் மீது கடுமையாக சாடி உள்ளார்.

சமீபத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் நடுநிலை இல்லை என்று கூறி, அவற்றில் பா.ம.க. பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், கருத்தரங்கத் திலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டி உள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவர் பயன்படுத்திய சொற்கள் குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சமீபத்தில்  தமிழ் பேரரசர் ராஜராஜ சோழரை விமர்சித்ததற்காக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது தமிழக காவல்துறையினர் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ராமதாசின் பகிரங்க பேச்சு மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

பத்திரிகையாளர்களின் தலையை வெட்டுவது எப்போது “தமிழ் படைப்பாற்றல்” ஆனது? என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.