நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்! திருச்சி மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை:

மிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் இன்று 7வது நாளாக நீடித்து வரும் நிலையில், நாளை முதல் நாளை பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுத்தி கடந்த 25ந் தேதி முதல் தமிழக முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்தம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து,  தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது. புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

அரசு, மருத்துவர்கள் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையேல் அவர்களது பணியிடம் காலியாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள் என கெடு விதித்தும், அதை மதிக்காமல் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  திருச்சி அரசு மருத்துவமனையில் நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.