இந்திய வீரர்களின் மரணத்தை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் : சிஆர்பிஎஃப்

டில்லி

புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என சி ஆர் பி எஃப் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 3 மணிக்கு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட சி அர் பி எஃப் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.   இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது என்னும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இது நாடெங்கும் கடும் சோகத்தை உண்டாக்கியது.   இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பல தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனார்.

https://twitter.com/crpfindia/status/1096305848886923264?s=20&fbclid=IwAR27C7ulCMP4tB55qBeL6doSynSKb4e5TpZ00aOPzXv1MeeqAJZkv3EDrSE

சி ஆர் பி எஃப் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், “ நாங்கள் இந்த தாக்குதலை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.   புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த படை வீரர்களுக்கு நாங்கள் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீர மரணம் அடைந்த அந்த சகோதரர்களின் குடும்பத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.   இந்த கொடூர தாக்குதலுக்கு விரைவில் பதிலடி அளிக்கப்படும்” என  பதியப்பட்டுள்ளது.