சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: பாகிஸ்தானுக்கு சுஷ்மா பதில்

--

டில்லி:

பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுக்கு பதில் கூறி உள்ளார்.

இந்தியாவில் பாகிஸ்தான் உருவாக்கி வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாது என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று  வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து உள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகள் பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தியாவுடன் நல்லுறவை உருவாக்கும் முயற்சியாக பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டுக்கு நரேந்திர மோடியை அழைக்க முடிவு செய்துள்ளோம் என்று பாகிஸ்தான் நாட்டின்  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியிருந்தார்.

மேலும், இந்த நூற்றாண்டில் ராஜீய உறவுகள் வேகமாக மாறி வருகின்றன. இப்போதும் கூட கர்தார்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள தாராளமாக விசா வழங்கியுள்ளோம். கர்தார்பூருக்கு சாலை அமைக்கவும் இரு நாடுகளும் இணைந்து முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயல் நிறுத்தப்படாது வரை பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்ற தெளிவு படுத்தி உள்ளது.

சார்க் நாடுகள் எனப்படும் தெற்காசிய நாடுகள் பிராந்திய கூட்டமைப்பில்,  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த மாநாடு அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் வரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.