சச்சினின் பிறந்தநாள் செய்தி…

டெல்லி

‘எல்லா நாளைப் போல இந்த  நாளும் நம்மைக் கடந்து போகும்’ என இன்று பிறந்தநாள் காணும் சச்சின் டெண்டுல்கர் இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று 47 ஆவது பிறந்தநாள் காணும் கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உலக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனாத் தொற்று, ஊரடங்கு என  நெருக்கடி நிறைந்த  இந்நாள் நிகழ்வை தன் ட்விட்டரில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

“எனது இந்த நாளை என் அம்மாவின் வாழ்த்துகளோடு தொடங்கினேன். ஊரடங்கால் வெளியே செல்ல முடியவில்லை. ஆனால் தற்போது அம்மாவிடம் அதிக நேரம் பேசமுடிகிறது.

இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது என இந்நாட்கள் செல்கின்றன. மனைவி மற்றும் பிள்ளைகளோடு நிறைய பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த சூழல் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் சவாலானது. உடல்நலனை மேம்படுத்துவதோடு மன வலிமையையும் அதிகரிக்க வேண்டும்.

எல்லா நாளையும் போல் இந்த நெருக்கடியான நாட்களையும் நாம் கடந்து வருவோம்” என நம்பிக்கை வார்த்தைகளை தனது பிறந்தநாளில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கொரோனா நெருக்கடி சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என சச்சின் அறிவித்திருந்தார்.

 

கார்ட்டூன் கேலரி