சட்டபையில் தாக்குதல்! கவர்னரிடம் புகார்!: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

இன்று சட்டசபையில் ஏற்ப்பட்ட அமளியைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “மன்றத்தை முறைாயக நடத்தி மறைமுக வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று மன்றாடினோம். அதை சபாநாயகர் கேட்கவில்லை. அதனால் அங்கேயே உட்காரந்து எங்களது அறப்போராட்டத்தை நடத்தினோம். பிறகு 3 மணிக்கு மீண்டும். ஆனால் 2.30 மணிக்கு 500 காவலர்களை அனுப்பி எங்களை அடித்து, சட்டையை கிழித்து, வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். நடந்த சம்பவங்களை நேரடியாக கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்போகிறோம்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.