நாங்கள் ஆட்சி அமைப்போம்: வாக்களித்தபின் தேவகவுடா பேட்டி

--

ஹாசன் :

ர்நாடக சட்டமனற் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, பாஜக முதல்வர் வேட்பாளர் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் பாரதியஜனதா, காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக களமிறங்கி உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது மனைவியுடன் வந்து  ஹாசன் தொகுதியில் உள்ள ஹொலினரசிபுரா (Holenarasipura ) பகுதியில் உள்ள  பூத் எண் 244ல் தனது வாக்கை பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவவுடா,  ஜனதா தள கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சக்தியாக உருவெடுக்கும், நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்புவதாகவும், அதற்கு தேவையான உழைப்பை அக்கட்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.