த்மாவதி படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோன் தலையை கொய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி  என்ற இந்தித் திரைப்படத்தை இயக்குநர் பன்சாலி உருவாக்கி இருக்கிறார். இதில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக வட மாநில்த்தில் உள்ள  ராஜபுத்திர இனத்தவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்து அமைப்புகள் சிலவும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஒரு இந்து அமைப்பு, “பத்மாவதி படத்தல் நடித்த  நடிகை தீபிகாபடுகோனே, இயக்குநர் பன்சாலி ஆகியோர் தலையை கொய்து வருவபர்களுக்க ரூ10 கோடி அளிக்கப்படும்” என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கறது. இதற்கு நாடு முழுதும் பலர் கண்டணம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தீபிகாபடுகான் தலைக்கு விலை வைத்து இந்து அமைப்பு கருத்து வெளியிட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு தீபிகாபடுகோனின் தலை வேண்டும்.. பாதுகாப்பாக! அவரை நாம் பாதுகாக்க வேண்டும். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமான தீபிகாவின் சுதந்திரத்தை நாம் மறுக்கக்கூடாது. என்னுடைய படத்துக்கும் கூட எதிர்ப்புகள் வந்துள்ளன; வன்முறையுடன் கூடிய எந்த விவாதமுமே மோசமானதாகும். நாங்கள் போதுமான அளவு சொல்லிவிட்டோம். இனி யோசித்து விழித்தெழ வேண்டிய தருணம் இது” என் கமல்ஹாசன்  ட்விட் செய்துள்ளார்.