ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!! டிடிவி தினகரன் ஆவேசம்

மதுரை:

முதல்வரை மாற்ற முயற்சி செய்கிறோம். இல்லை என்றால் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டிடிவி தினகரன் மதுரையில் பேட்டி அளித்தார்.

டிடிவி தினகரன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற முயற்சிக்கிறோம். இல்லையேல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். பொதுமக்களை ஏமாற்றி ஆட்சியை தொடர்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். பதவி இல்லை என்றால் ஓ பன்னீர் செல்வத்திற்கு தூக்கம் வராது” என்றார்.