சென்னை:

ன்று இரவு சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இரண்டாக பிளவுபட்டிருக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது  நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

“’இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறி்த்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம். கழகத்தை ஒற்றுமையாக நடத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இணைந்து செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம். அ.தி.மு.க.வின்  சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒன்றுபட்டு இருக்கிறோம்.  தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை செய்தோம்.

இது ரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் தெரிந்தே இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.  சசிகலா ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறும் தகவல்களில் உண்மையில்லை. டி.டி.வி.தினகரன் பெங்களூருவில் இருந்து வந்தவுடன், அவருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் . அவரது  பதவி தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படவில்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.