பன்றிகளுக்கு கறுப்பு சட்டை அணியும் போராட்டம்!! பரமஹம்ச நித்யானந்தர் வீடியோ பேச்சு

சென்னை:

பன்றிகளுக்கு பூனூல் போராட்டம் நடத்தினால், நாங்கள் பன்றிகளுக்கு கறுப்பு சட்டை போடும் போராட்டம் நடத்துவோம் என்று பரமஹம்ச நித்யானந்தர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆவணி அவிட்டம் அன்று பன்றிகளுக்கு பூனூல் போடும் போரட்டம் நடத்தப்படும் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து பரமஹம்ச நித்யானந்த சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வளை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ‘‘பகுத்தறிவு பன்னாடைகள் இந்து மதத்தை மட்டுமே கங்கனம் கட்டிக் கொண்டு மற்ற சமூகங்கள், மதங்களின் எத்தனை அறிவு சாராத விஷயங்கள் இருந்தாலும் அதை பார்ப்பதில்லை என்று நவ துவாரங்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாங்கிய பணத்திற்கு எங்களது வாழ்க்கை முறையாக வைத்துக் கொண்டு மூடத்தனமாக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.

பூனூல் பிரிவினையை ஏற்படுத்துவதை போல் கூறுகிறார்கள். பிராமணர்கள் மட்டுமின்றி அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தும் விஷயம். கீழடி காலம் தொட்டு மூத்த குடி தமிழன் சைவ தமிழன். வாழ்கின்றவன். வாழ போகின்றவன்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘60 ஆண்டுகள் ஆண்ட பரம்பரையா இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு ஆடி விட போகிறது. ஆகமங்களை கடைபிடிக்கும் வாழ்க்கையில் வாழ்கிறோம். பூனூல் என்பது மொத்தம் இந்துக்களுக்கும் சொந்தமானது. பூனூலை அவமதிப்பது மொத்த இந்துக்களை அவமானப்படுத்துவதாகும்.

பன்றியும் நாங்கள் வழிப்படும் தெய்வஙகளில் ஒன்று. வராக மூர்த்தி என்பது நாங்கள் வழிபடுவது வேறு. நீங்கள் அதற்கு பூனூல் போடுவது வேறு நோக்கமாகும். எங்கள் பன்றிகள் வழிபட தகுந்தவை. உங்களது பன்றிகள் இழிவுகளுக்கு உரியது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இது 1960ம் ஆண்டு கிடையாது. தேடித்தேடி ஏன் ஆப்பு மீது உட்காறுகிறீர்கள். நம் வாரிசுகளுக்கு சத்தியத்தை கொடுக்கும் தீட்சை தான் பூனூல் அணிவது. நீங்கள் பன்றிகளுக்கு பூனூல் அணியும் போராட்டம் நடத்தினால், நாங்கள் பன்றிகளுக்கு கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துவோம்.

தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும் வகையிலும், அமைதியை கெடுக்கும் இந்து விரோதிகள் வாலை சுருட்டி தங்கள் வாழ்க்கையை கவனித்து கொள்ள வேண்டும். எல்லோரும் பூனூல் அணியுங்கள் காயத்ரி மந்திரம் கூறுங்கள். இது போராட்டமல்ல. வேரோட்டம். எத்தனை போராட்டம் வந்தாலும் வேரோட்டத்தை நிறுத்த முடியாது. அனைவரும் இந்த போராட்டத்தை எதிர்க்க வேண்டும். இது அடிப்படை கடமை’’ என்றார்.

You may have missed