பெங்களூரு:

ர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று  கர்நாடக முன்னாள்  முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் தங்களது பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள அந்த தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில்,  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ காகே, காங்கிரசில் சேர விரும்புவதாக தெரிவித்து உள்ளார். ஆனால், அதை நான் உடனே ஏற்கவில்லை. அவர்  எங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கட்சி மேலிடம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன் என்றார்.

மேலும், 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.