தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம்: ஒரு நாளும் மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி சீறியிருக்கிறார்.

கோரக்பூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.  தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவை குறித்து மக்களுக்கு சில வாக்குறுதிகளை அவர் அளித்தார்.

கூட்டத்தில் தொண்டர்கள் முன்னிலையில் மமதா பானர்ஜி பேசியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம்.

மேற்கு வங்கத்தில் அதை ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் உள்ள ஒரு குடிமகனை கூட அவர்களால் (மத்திய பாஜக அரசு) தூக்கி வீச முடியாது. அவர்களை போராளிகளாக்கி விட முடியாது என்று ஆவேசம் பொங்க முழங்கினார்.