சென்னை:

ந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்பபடியாக வலுவிலக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்த வானிலை மையம், மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்திருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்த வருவதாக வானிமை மையம் கூறி உள்ளது. தற்போது இந்த  காற்றழுத்த தாழ்வுமண்டலம் மினிகாய் தீவுக்கு தென்கிழக்கே 190 கி.மீ.-ல் நிலைகொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக  அதிகபட்சமாக தூத்துக்கடியில் 20 செ.மீ மழை பெய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், குமரி கடல் பகுதியில் 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன்பின்னர் வலுக்குறைந்து, கிழக்கு மத்திய அரபிக்கடல் நோக்கி நகரும், அதன் காரணமாக படிப்படியாக வலுவிழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.