லைக்கவசம்(ஹெல்மேட்)  அணிவதால்  வாகனவிபத்துக்களில் நம்முடைய தலைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. ’’என் ஜான் உடம்புக்கு தலையே பிரதானம் ’’ என்பது முதுமொழி. எனவே அனைவரும் கட்டாயம் ஹெல்மேட் எனும் தலைக்கவசம் அணிவது அவசியம்
இது  இன்றையக்காலக்கட்டத்தில்  வாகன மோதல்களில் 70% இறப்புகள் தலையில் ஏற்படும் காயங்களில் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது

தலைக்கவசம்(ஹெல்மேட்) வகைகள்

full face, Open Face, Half Face , Tropical Face என்ற வகைகள் உண்டு , இது பாலிபுரொனைல், பாலி கார்பன் போன்றவற்றால் பாதுகாப்பாக உற்பத்தி செய்யப்படுகிறது, தலைக்கவசம் அணியும் போது அவரவர்களுக்கு ஏற்ற அளவு காது, தலைப்பகுதி, முகம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு வாங்கிக்கொண்டால் அசௌவுகர்யத்தினை தவிர்க்கலாம்

பயன்

தலைக்காயம், மூளை, முக காயங்களை  விபத்தில் இருந்து காக்கிறது.  வாகனம்  ஓட்டும்போது கண்களில் தூசுகள் படாமல் காக்கவும், பூச்சீகள் முகத்தில் மோதாமல் இருக்கவும் ,. வெயில், மழையில் இருந்து நம்முடைய தலைப்பகுதியை காக்கிறது. குளிர்காலத்தில் இருக்கும் அதிக குளிரை தலைக்கவசம் அணிவதால் தவிர்க்கலாம், தூசிகள் மூக்கில் சென்று அலர்ஜிக் , ஆஸ்துமா போன்ற நோய்கள் வருவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்
தலைக்கவசத்தை அணியும்போது வேறு எந்த ஓரப்பார்வை குறுக்கீடு (Diversion) இல்லாமல் வாகனம் ஓட்டமுடிகிறது.

பராமரிப்பு

தலைக்கவசத்தை  முறையாக பராமரிக்காவிடில் அதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். தலைக்கவசம் நேரடியாக தலையில் அணிவதன் மூலம் அதில் இருக்கும் கிருமிகள் மூலமாக தலையில் கிருமி தொற்றும் ஏற்பட உள்ளது. தலைக்கவசம் இருக்கமாக அணிவதன் மூலம் முடி உதிர்வு, முடி வளர்வதை தடுப்பது , தலையின் முன் பகுதியில் முடி விழுவது போன்றவை ஏற்படலாம். நீண்ட நேரம் அணியும்போது கழுத்து வலி ஏற்படலாம்

தவிர்க்கு்ம் முறைகள்
தலைக்கவசத்தை நன்கு காற்றோட்டமான வெயில் படும் இடங்களில் வைக்கவேண்டும்.  Anti Septic Sprays, Anti Bacterial Solution ஆகியவற்றை ஹெல்மெட்டின் மீது தௌிக்கலாம்
தலையில் Scalp Cover அணிந்து தலைக்கவசத்தை அணியலாம் தலைக்கவசம் அணிபவர்கள் தலையை உலர்வாகவும், ஈர பதமில்லாததாகவும் வைத்துக்கொள்வது நலம்.
கழுத்துவலிக்காக உரிய உடற்பயிற்சி மற்றும் யோகாசம் செய்தால் வலி வராமல் தடுக்கமுடியும் மற்றும் எடைக்கு ஏற்ற அளவு  தலைக்கவச  அளவுகளை சரியாக பயன்படுத்தவும்

தலைக்கவசம் நம்முடைய உயிர்கவசம், எனவே இருசக்கர வாகனத்தின் செல்பவர்கள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்வோம்.

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS.,PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002