குல்லா அணிவது என்னை முஸ்லீமாக மாற்றாது: சுவாமி அக்னிவேஷ் பேச்சு

திருவனந்தபுரம்: குல்லா அணிவது என்னை முஸ்லீமாக மாற்றாது என்று சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.

சுவாமி அக்னிவேஷின் ‘அரசியலமைப்பைச் சேமி’என்ற பெயரிட்ட பேரணிக்காக கேரளா சென்றுள்ளார். அதற்கான விழா மேடையில் சுவாமி அக்னிவேஷ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கண்ணூர் மாவட்டத் தலைவர் வி.கே. அப்துல் காதர் மவுலவி கலந்து கொண்டார்.

அப்போது இருவரும் அவரவர் தலையில் இருந்த தொப்பியை மாற்றிக் கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

சுவாமி அக்னிவேஷ் தனது தலையில் இருந்து குங்குமப்பூ வண்ண தலைப்பாகையை அகற்றுகிறார். பின்னர், ஐ.யூ.எம்.எல் தலைவர் அப்துல் காதர் தனது தொப்பியை அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறார்.

வெள்ளை தொப்பியை பலத்த  கை தட்டல்களுக்கு மத்தியில் அணிந்துகொள்கிறார். பிறகு அப்துல் காதர் பக்கம் திரும்பி, அவரது தலையில் தமது தலைப்பாகையை அணிவிக்கிறார்.

ஒரு தொப்பி அணிவது என்னை ஒரு முஸ்லீமாக மாற்றாது, தலைப்பாகை அணிந்திருப்பது அவரை இந்து ஆக்குவதற்கு இல்லை என்று பேசினார் சுவாமி அக்னிவேஷ்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சுவாமி அக்னிவேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் சிஏஏக்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக வாழ்த்தினார். கேரளாவில் சிஏஏ எதிர்ப்பு இயக்கம் நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Abdul Kader Moulavi, IUML, kerala, swamy Agnivesh, ஐயூஎம்எல், கேரளா, சுவாமி அக்னிவேஷ், தலைவர் அப்துல் காதர் மவுலவி
-=-