ஃபைனான்சியர் அன்பு என்னிடம் தவறாக நடந்தாரா?: தேவயானி

 

அன்பு – தேவயானி

சோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்பு பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்கள் சொல்லப்படுகின்றன. “தன்னிடம் பணம் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் தராத ஆண்களை மட்டுமல்ல.. பெண்களையும் விட்டுவைக்கமாட்டார். அவரிடம் பணம் வாங்கிய நடிகை தேவாயனி, பணத்தை உரிய காலத்தில் திருப்பித்தர முடியாமல், பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களை அன்புவால் அனுபவித்தார் தேவயானி” என்று ஒரு பேச்சு உலவுகிறது.

இது குறித்து தேவயானி என்ன சொல்கிறார்..

அவர், “காதலுடன் படத்துக்காக அன்புவிடம் பணம் வாங்கினோம். அவர் என்னை பார்த்த்தே இல்லை. என்னிடமும் என் கணவர் ராஜகுமாரனிடமும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்து பணம் கொடுத்தார். காதலுடன் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி போடும்போதுதான் அவரை நான் நேரடியாக பார்த்தேன்.

அவரிடம் பணம் வாங்கியது போலவே, உரிய காலத்தில் திருப்பித்தந்தோம். எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

அன்பு எங்கள் மீது மிகுந்த மிக மரியாதை செலுத்துபவர். அவர் மீதும் எங்களுக்கு நல்ல மரியாதை உண்டு. எங்களைப் பொறுத்தவரை  அவர் வெரி நைஸ் மேன். ஜென்டில் மேன். அவர் . எங்களுக்கு எந்தத் தொந்தரவும் தந்ததில்லை.

மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்கவே மாட்டேன்..” என்கிறார் தேவயானி.

அவர் பேசிய வீடியோ..