அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு டிவிட்டரில் பாடம் கற்பித்த இந்திய பெண்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு டுவிட்டரில் பாடமெடுத்த இந்திய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ண உள்ளன.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது குளிர்காலம் நிலவி வருவதால் அமெரிக்காவில் பனிப்பொழுவு ஏற்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவில் அதிக அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. நெடுஞ்சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.

climate

இந்நிலையில் பனிப்பொழிவின் தீவிரம் குறித்து அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், “ புவி வெப்பமயமாதலில் என்னதான் நடக்கிறது…முந்தைய வரலற்றுகளை முறியடிக்கும் வகையில் பனிப்பொழிவு உள்ளது “ என குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் பதிவிற்கு பதிலளித்து அசாம் மாநிலம் ஜோர்ஹாத் நகரை சேர்ந்த அஸ்தா சர்மஹ்(18) என்ற பெண் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்பின் கருத்திற்கு பதிலளித்த அஸ்தா, “ உங்களை விட நான் 54 வயதிற்கு சிறியவள். சுமரான மதிப்பெண்களுடன் இப்போது தான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறே. இருப்பினும் உங்களுக்கு ஒன்றை நான் தெரிவித்துக் கொள்கிறேன். பருவக்கால நிலையும், சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல. உங்களுக்கு இன்னும் எளிமையாக புரிவதற்கு நான் பயன்படுத்திய என்சைக்ளோபீடியா நூலை அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன். அதில் அனைத்து விபரங்களும் விளக்கப்படங்களுடன் உள்ளன “ என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளர்.

அஸ்தாவின் இந்த பதிவிற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் இருந்து லைக்குகளும், பாராட்டுக்களும் வந்த வண்ணம் உள்ளன. அத்துடன் பருவநிலை மற்றம் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள அஸ்தா விரும்பினால் அவருக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.