தமிழகத்தில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறது!? டிடிவி தினகரன்

சென்னை:

மிழ்நாட்டில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மழை காரணமாக தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரனும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இடைத்தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வியப்பளிக்கிறது. தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது என்றார்.

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்த ஸ்டாலின் தற்போது தேர்தல் வேண்டும் என்கிறார்.

தமிழகதில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதே? என்ற எண்ணம் தோன்றுகிறது என்று கூறினார்.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக   நில அபகரிப்பு புகார் எழுந்துள்ள நிலையில்,  அந்த பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு ஆளுநர் செல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.