செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் கவிதாலயாவின் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸ் ஒளிபரப்பு….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாலசந்தர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. முன்னணித் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம், வெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

படத் தயாரிப்பு மட்டுமல்லாது டிவி சீரியல்களையும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு தயாரித்தது.

தற்போது புதிதாக ‘டைம் என்ன பாஸ்’ எனும் வெப் சீரிஸ் ஒன்றையும் அமேசான் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளது.பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.