உருவாகிறது டெல்லி காவல்துறை அதிகாரி சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸ்….!

 

கடந்த வருடம் காணாமல் போன குழந்தைகளை மீட்டு கவனம் ஈர்த்த டெல்லி காவல்துறை அதிகாரி சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸ் உருவாகிறது. சர்வதேச பெண்கள் தினமான இன்று (மார்ச் 8) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீமா மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குக் கீழ் இருந்தவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலிருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார்.

20 வயதில் காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.