அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக இணையதள வசதி… தமிழகஅரசு

--

சென்னை:

மிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், அதற்குரிய வாரியத்தில்  உறுப்பினராக இணையதள வசதியை தமிழகஅரசு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாவதற்கு இனி, தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பிக்க இணையதள வசதி labour.tn.gov.in ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை தொழிலாளர்கள் பயன்படுத்தி வாரியத்தில் தங்களை உறுப்பினராக்கி அரசின் சலுகைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.