லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.

நேற்று அம்மாநிலத்தில் 29,754 புதிய கொரோனா  தொற்றுகள் பதிவாகின. 162 பேர் மரணமடைந்துள்ளனர். மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 23ம் தேதி முதல் லாக்டவுன் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.