வார ராசிபலன் 20-10-17 to 26-10-17 -வேதா கோபாலன்

வார ராசிபலன்

மேஷம்

அம்மாவின் உடல் நிலை பற்றி சிறிய கவலைகள் இருந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். ஷ்யூர்…நீங்கள் மதித்துப்போற்றும் ஒருவர் உங்களுக்காக நிறைய ஹெல்ப் செய்யப்போறாருங்க. என்ஜாய்.  ஆரோக்யம் பற்றி அவ்வப்போது சிறு கவலைகள் இருக்கும்தான்.  அதுக்காக ஒரேயடியாய் இடிஞ்சு போய்த் தலையில் கையை  டென்ஷன்  ஆகணுமா  என்ன? பூனையை பூதக்கண்ணாடி வழியே பார்த்தால் புழு கூட அனகோண்டா மாதிரிதான் தெரியும் .. அதுக்காக டென்ஷன் ஆயிடுவீங்களா என்ன?

சந்திராஷ்டமம் : அக்டோபர்22 முதல் அக்டோபர் 24 வரை

ரிஷபம்

சகோதர சகோதரிகளுடன் கொஞ்சம் டிஷ்யூம் டிஷ்யம் இருக்கும். நீங்கதான் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போனால் என்னவாம்?  எதிர்பாலினத்து ஃப்ரெண்ட்ஸ் மிகமிக உதவப்போறாங்க. அது பற்றிப் பேசுபவர்கள் வாய்ய்க்கு அவல் கிடைக்காமல் கம்பீரமாய் நிமிர்ந்த நிற்கும்படி நீங்கதான் கவனமாய் இருக்கணும். பார்த்துக்குங்க.  நல்ல செலவுகள் சந்தோஷ செலவுகள் என்று இருக்கும். துணி மணிகள் ஆபரணங்கள் என்று வாங்குவீங்க. கணவரின் அன்பும் ஆதரவும் நிறைய இருக்கும். அவருக்கு சற்று ஸ்லோவான முன்னேற்றங்கள் இருந்தாலும் ஸ்லோகங்கள் உதவும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 24 முதல் அக்டோபர் 27 வரை

மிதுனம்

மாணவர்களுக்கு நிஜமான பொற்காலம். திருமணத்திற்குக் காத்திருந்தவர்களுக்குப் பிளாட்டின காலம். நீங்கள் பேசுவதெல்லாம் பலிக்கும். நல்லவற்றையே பேசுங்கள். இதுதான் சாக்கென்று எதிரிகளுக்கு சாபமெல்லாம் விடாதீங்க. ஏன் தெரியுமா? நீங்க எது பேசினாலும் அதனால்  உங்களுக்கும் அதற்கேற்ற நன்மை தீமை நிகழும்.  லோன் போட வேண்டிய அவசியம் இருந்தாலன்றி அவாய்ட் செய்யப் பாருங்களேன்…  வீண் தாமதங்கள் டென்ஷன் தரும். லோன் கிடைப்பதில் மட்டுமல்ல..அடைப்பதிலும் .. எனினும் கடைசியில் நிம்மதியும் வெற்றியும் உங்களுக்குத்தான்.

கடகம்

வெளியூர் வெளிநாடுகளில் உள்ள மகன் மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூ’கலம் தாண்டவமாடும். கணவர் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்புள்ளது. ஏர்போர்ட் சென்று டாட்டா சொல்லத் தயாராகுங்க.  மம்மிக்கு திடீர்னு நன்மை வரும். வீடு வாங்குவீங்க.  பத்திரத்தை ஒரு முறை நல்லா செக் செய்துட்டு நல்ல வக்கீலைக் கலந்தாலோசித்தபிறகு கையெழுத்துப் போடுவது  நல்லது.  அம்மா உங்களுக்கு அருமையான குருவாய் இருப்பாங்க. அவங்க  சொல்ற அனைத்தையும் உடனுக்குடன்  கேட்டு ஃபாலோ செய்ங்க. மிகவும் நல்லது .

சிம்மம்

பேச்சில் அமிலம் கலக்காம பேசறது உங்களுக்கு மட்டுமில்லை. மத்தவங்களுக்கும் நல்லது.  சகோதர சகோதரிகள் உங்களுக்கு நல்லது செய்வாங்க. நீங்க நன்றியோட இருங்க.  அது போதும்.  குடும்பதத்தில் துரிதமான நிகழ்வுகள் நடக்கும்.  மம்மிக்கு சில பிரச்சினைங்க ஏற்படும்தான். நான் இல்லைன்னா சொன்னேன். ஆனால் அதை அவங்களோட புத்திசாலித்தனத்தால அவங்களே தீர்த்துக்குவாங்க. டோன்ட் ஒர்ரி.

கன்னி

மூக்கின் மேல் பயணம் செய்யும் அந்தக் கோபம் என்ற சமாசாரத்தை விரட்டியடிங்க. அப்புறம் பாருங்க .. உங்க சாதனைப் பட்டியலை நீங்களே வியந்து பாராட்டுவீங்க.  குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவரின் வழிகாட்டுதலால் நீங்க ரொம்பவும் முன்னேறப்போறீங்க.  வங்கியில் உள்ள இருப்பு உயர்ந்துகொண்டே போகும்.  ஜாலிதான். நிறைய செலவு செய்யலாம், ஆனா மாட்டீங்க.  அம்மாவைத் திருப்தி செய்வீங்க. அதுக்கு மட்டுமே செலவு.

துலாம்

உங்க கவர்ச்சி அம்சம் உயரும். நாலு  பேர் பாராட்டுவாங்க. புகழ்வாங்க.  மேடையில் கைதட்டல் கிடைக்கலாம். அவார்ட் ரிவார்ட்டெல்லாம் வாங்குவீங்க.       அதற்குக் காரணமான வழிகாட்டியாக ஒருவர் இருப்பார்.  பேச்சில் சற்றே ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். வழக்கமான படபடபடப்பு அவசரம் எதுவும் வேண்டாம். எனிவே… உங்க இனிய பேச்சினால் .. புத்திசாலித்தனமான வார்த்தைகளால் உயர் அதிகாரி உங்களைத் தலையில் தூக்கி வெச்சுக் கொண்டாடுவாரு.

விருச்சிகம்

மாணவர்களா? எனில் மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் உள்ளவர்கள் தங்கள் முன்னேற்றத்துக்காக த் தேர்வுகள் எழுத வாய்ப்புண்டு. அதில் வெற்றி நிச்சயம் உங்களுக்குத்தான். கவலை வேண்டாம்.  சகோதர சகோதரிகள் வெளிநாடு போவாங்க. வெளியூர் போவாங்க. அவங்களுக்கு உங்களால் நன்மை உண்டாகும். பொறுமையா இருந்தால் உங்களுக்கும் அவங்களால கட்டாயம் எதிர்காலத்தில் நன்மை உண்டு. வெயிட் அண்ட் ஸீ.

தனுசு

குடும்பத்தில் யாராச்சும் ஃபாரின் போவாங்க. டாட்டா காண்பிக்க நீங்க விமான நிலையம் போவீங்க.   பிரிவு  பற்றியெல்லாம் டென்ஷன் வேணாம்.  வாழ்வில் மிகவும் முன்னேறுவாங்க. அதன் பலனை நீங்கள் உள்படக் குடும்பமே அனுபவிக்கப் போறதே. அதற்காகப் பொறுத்துக்குங்க. ப்ளீஸ்.  நல்ல செலவுகள் கல்விக்காக ஏற்படும். முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் படிப்படியாய்த்தான் இருக்கும். அவசரப்பட்டால் எப்டிங்க?

சந்திராஷ்டமம் : நவம்பர்9 முதல் நவம்பர்11 வரை

மகரம்

நிறைய லாபம் வரும். ஆனால் மனசில் திருப்திதான் இருக்கா. பிசியாவீங்க. அதனால் நன்மைகள் சற்றத் தாமதமாகவே வரும்.  வெளிநாட்டுப் பயணங்கள் இனிதே நகரும்.  தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்வுகள் இருந்தாலும் ஒருக்கணம் பிரேக் போட்டாலும் மறு நிமிஷம்  இயல்பு வாழ்க்கை தொடரும்.   கல்வி சம்பந்தமான உத்யோகம் அல்லது தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.   பெட்ரோல்.. இரும்பு.. வாகனம் லாபம் தரும்

கும்பம்

லாக்கர்ல வைர நெக்லசைப் பாதுகாப்பதுபோல் ஆரோக்யத்தைக் கொஞ்ச நாளைக்குப் பாதுகாத்தே ஆகணும். பத்திரம். சொல்லிட்டேன்.   வெளிநாட்டில்  உள்ள நண்பர்களால் நன்மை உண்டு. வெளிநாடு சம்பந்தமான சிறு செலவுகள் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் உதவும்.  புது வேலை   தேடிக்கொள்ள சற்று அதிக முயற்சிகள் செய்ய வேண்டி வரலாம்.  கல்வி சம்பந்தமான உத்யோகம் உடனே கிடைக்க வாய்ப்புள்ளது.  பிரமாதமான அதிருஷ்ட வாய்ப்புகள் உண்டு

மீனம்

தந்தையைப் பற்றிய கவலைகள் ஒரு வழியாய்த் தீர்ந்து மனசில் நிம்மதி படரும். வயிறு சம்பந்தமான சிறு உபாதைகள் இருக்கும். எனவே சாப்பாட்டு விஷயத்தில்  சற்றே கூடுதல் கவனத்துடன் இருந்துவிட்டீர்கள்னா நோ பிராப்ளம்.  குழந்தைகளைப் பற்றி வேண்டாத டென்ஷன் எதுக்கு? அவங்க உங்களை எதிரியாய்ப் பார்க்காதபடி புன்னகையுடன் டீல்  செய்துட்டீங்கன்னா போதுமே.  கோயில் ட்ரிப்கள் சற்று தாமதப்படலாம். எனினும் நிறைவேறும்

சந்திராஷ்டமம் : அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22 வரை

கார்ட்டூன் கேலரி