வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

மேஷம்

நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் திருமணம் அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து ரேஷன் கார்டில் இடம் கேட்பார்கள். லாப ஸ்தானம் ..அதாவது வருமானத்தைக்குறிக்கும் பதினோ ராம் வீடு குரு பார்வை பெற்றுவிட்டதால் அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர் பார்க்காத உயர்வு ஒன்று இந்த வாரத்தில்… மாதத்தில் கிடைக்கும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க… வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். இனி குட்டீஸ்க்காக நிம்மதிய டைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க.ஆரோக்யமா ஃபைன், நிதி நிலையா திருப்திகரம், குடும்ப மகிழ்ச்சியா சூப்பர்னு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும்.

ரிஷபம்

இப்போது இருக்கும் வேலையையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்க ளுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அலைபாயுதே கண்ணா என்று தடுமாற வேண்டாம். உடல் நலம் நன்றாகவே இருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். பொறுப்பை உணர்ந்து செயல் படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பெற்றோர்க ளுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா!வெளியூர் வெளிநாடு செல்ல நிறைய வாய்ப்பு இருக்கு. எதையும் கவனத்துடன் இரண்டு முறை சரிபார்த்து செய்யுங்க. குறிப்பா அலுவலக வாசிகளுக்கு இந்த வாக்கியம் மஞ்சள் நிற ஹைலைட். நண்பர்களைக் குறிக்கும் ஆறாம் வீட்டில் குரு பகவான் அருமையாக அமர்ந்திருக்கிறார். எனவே நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்பவராக அமைவர். குரு என்பதால் அந்த நண்பர்கள் நீங்கள் கற்பதற்கும் உதவி செய்யும் குருவாக அமைவார்கள்.

மிதுனம்

வார்த்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாற்றி வாக்கி னால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி (கவனிங்க எல்லாமே பாசிட்டிவ் வார்த்தைகள்) ஆகியவை ஏற்படும்.. வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண்டாம். முன்பைவிட இப்போ அதிருஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகக் கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி  இதுபோல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் நிறையப்புதிய பொறுப்புக்கள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து  வைக்கறது நல்லது

 கடகம்

இந்த வாரம் நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. அதே சமயம் வெளியூர் வெளிநாடுன்னு பயணங்களும் உண்டு. வேண்டாத எறும்பு மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிப் பல்கடிக்காதீங்க. பல் பிழைச்சுப் போகட்டும்.உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. உங்க சந்தோஷத்துக்கு இதைவிட வேற என்ன காரணம் வேண்டும்! உங்களுக்கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க, வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.பொழுது போக்குக்கு நிறைய நேரம் செலவிடுவீங்க. கண்டிப்பா அதுவும்தான் தேவை. ஆனா கடிகாரத்திலும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்க றது  நல்லது. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். தைரியமாய் இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். அலுவல கத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத உயர்வு ஒன்று ஜூன் மாதத்தில் கிடைக்கும்.

சிம்மம்

இப்பவே நிம்மதியை அதிகரிச்சுக்குங்க. உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் இந்த வாரம் நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு அவரின் வழி காட்டுதல் பெரிய தூண்டுதலாக இருக்கும். வெற்றிகரமான வாரம் இது.‘ கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க.  அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். தெரிந்தவர்களின் க.இ. ஏன் முன்பின் தெரியாதவங்களின் கல்வியாகவும் கூட இருக்க லாம்.சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்மா. ஆரோக்யம் அற்புதமாய் இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்பு றுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை சேவ் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு வெச்சுடுங்க.

கன்னி

நீங்க பேசுவதெல்லாம் வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க. குழந்தைக்காகக் காத்திருக்கற வங்களுக்கு வாரக் கடைசியில் நல்ல செய்தி உண்டு. நண்பர்களால் நன்மை நிறைய ஏற்படும். வாழ்க்கையில் சந்தோஷமான திருப்பு முனை உண்டு.புது வேலை மாறி யிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகர மாய் முடியுதே அதுக்கே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டாமோ!

சந்திராஷ்டமம் : 02.02.2017 முதல் 04.02.2017 வரை

துலாம்

தன்னம்பிக்கையை வளர்த்துக்  கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ கட்டி சேரணும்மா. புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும். அப்புறம் அசடு வழிய வேண்டாம், தொட்டிலுக்குத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. கடந்த ஒன்றரை வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்த போயிருந்தது. இப்போதான் அது நினைவுக்கு வரும்! நிறைய ஆடை அணி மணிகளும் நகை வகைகளும் வாங்கப் போறீங்கம்மா. இத்தனை காலம் உங்கள் மீது அழுத்திக் கொண்டிருந்த சனி பகவான் விலகியதிலிருந்தே வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. ஐந்தாம் வீட்டுக்கு உரிய சனி பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்றிருந்தால் குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிட்டதே! அனைத்திற்கும் காரணம் போற்றுதலுக்கும் வணங்குவதற்கும் உரிய சனிபகவான்.. இனி குழந்தைகளைப் பற்றி நீங்க  நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க. உங்கள் ராசி நாதன் சுக்கிரன் அற்புதமாக உச்ச வீட்டில் அமர்ந்திருக்கிறராரே! இதன் காரணமாக வாக்கில் கவர்ச்சி அம்சம் கூடும். ராகு பகவான் பதினோராம் வீட்டில் அமர்ந்திருக்கும் காரணத்தினால் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க.

சந்திராஷ்டமம் : 04.02.2017 முதல்  06.02.2017 வரை 

விருச்சிகம்

அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்தி ருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. தைரியமாய் இருங்க. உங்க ளுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். அலுவல கத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத நன்மை ஒன்று  வாரக் கடைசியில் கிடைக்கும்மா.

திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக்காக ஏங்குபவர்கள், உத்யோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு.எடுத்த காரியத்தை போஸ்ட்போன் பண்ணிக் கடைசியில் மலையாய் வேலையைக் குவிச்சுக்காதீங்க. உங்க மம்மிக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வந்தேமாதரம்னு மங்களம் சொல்லி மகிழ்ச்சியடைவீங்க.

சந்திராஷ்டமம் : 06.02.2017 முதல் 09.02.2017 வரை

தனுசு

சனி பகவான் உங்க ராசியின் மேலேயே வந்து அமர்ந்திருப்பதால் புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க.

இந்த வாரம் வேற அலுவலகம், வேற பள்ளிக்கூடம், புதிய கல்லூரி சேரப்போறீங்க. வாழ்த்துக்கள். மம்மிக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வந்தே மாதரம்னு மங்களம் சொல்லி மகிழ்ச்சியடைவீங்க. குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்மா. சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும் – வைசி வெர்சா. விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அபார வெற்றி குவிப்பீர்கள்.

நீங்க மாணவரா? புத்திகாரகன் உங்க ராசி நாதன்..குருவும் நன்மை செய்யும் வீட்டில். எனவே  உங்களுக்கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க. ராசிநாதன் அதிருஷ்டவீடாகிய ஒன்பதில் என்பதால தன்னம்பிக்கை அபரிமிதமாக வளரும்.  நாலாம் வீடு சொந்த இல்லத்தைக் குறிப்பது. அந்த வீட்டிற்கு குரு பார்வை கிடைத்ததால் புதிய வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவீங்க.

மகரம்

ராசியின் மீது சூரியன் இருப்பதால் உஷ்ணாதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நமக்கு மிஞ்சி யாரும் இல்லைன்னு தன்னம்பிக்கையோட நினையுங்க. நம்மை மிஞ்ச யாரும் இல்லைன்னு கர்வத்தோட நினைக்கா தீங்க. குழந்தைகள் வாழ்க்கையில் ஓரிரு தடைகள் ஏற்பட்டாலும் கடைசியில் எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். வார்த்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாற்றி வாக்கினால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி (கவனிங்க எல்லாமே பாசிட்டிவ் வார்த்தைகள்) ஆகியவை ஏற்படும். குடும்பத்தில் ஒரு நபர் அதிகமா வார். உழைப்புக்கு வெற்றி உண்டு. முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டி யிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்கப்பா. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு.

கும்பம்

களத்திர ஸ்தானம் என்றால் கணவரை/மனைவியைக் குறிப்பிடும் வீடாகும். அந்த வீட்டில் ராகு அல்லவா அமர்ந்திருக்கிறார்! அதைப் பார்ப்பவர் கேது ஆயிற்றே! எனவே உங்கள் வீட்டில் கணவன் மனைவி சண்டை பக்கத்து வீட்டுக்காரர்கள்  தொலைக் காட்சித் தொடர் நாடகத்தை  அணைத்துவிட்டுப் பார்க்கும்படி ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்க பொறுப்பு.  பிரச்சினைகள் எல்லாம் சில்ல றைப் பிரச்சினகைள்தாங்க! குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். சிலருக்கு வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! நிறைய உல்லாச மான பயணங்கள் போவீங்க. உங்க குழந்தைங்களுக்கு நல்லது நடக்கப்போகுதுங்க. மம்மியை பத்திரமாப் பார்த்துக்குங்க. சகோதரன்/ சகோதரிகிட்ட சண்டை வேண்டாம். மீனைப் பார்த்து திமிங்கலம்னு நினைக்கறமாதிரி சின்னத் தலைவலி காய்ச்சலையெல்லாம் கான்சர்னு பூதக்கண்ணாடி வழியாப் பார்க்காதீங்க மேடம். அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும் பொது இடங்களிலும் உங்க செல்வாக்கு ராக்கெட்டாய் உயரும்.

மீனம்

செலவுகளைக் குறிக்கும்  அந்தப் பன்னிரண்டாம் வீட்டைப் பாருங்களேன!  ராகு பார்க்கிறார். கேது அமர்ந்திருக்கிறார். போதாக்குறைக்கு சுப கிரகமாகிய குரு பகவானும் அழகாய்ப்பார்க்கிறார். இதன் பலனாக ..அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழுமனசோட செலவு செய்யச் செய்ய மகாலட்சுமி அம்மா கஜானாவை நிரப்பிடுவாங்க. ராகு கேது சம்பந்தம் இருப்பதால் வெளிநாடு வெளியூர் சம்பந்தமான செலவுகள் இருக்கும்.வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.

கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்கம்மா. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். இனி குட்டீஸ்க்காக நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க. வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண்டாம். முன்பைவிட இப்போ அதிருஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா? குரு பார்ப்பதால் சுபமான செலவுகள் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொடுக்கும். தைரியமாய் இருங்க. உங்களுக்கே செலவுகளில்  எது அவசியம் எது அநாவசியம்னு சரியாய்த் தெரியும். குரு பகவான் ஆரோக்ய ஸ்தானத்தில் இருப்பதாலேயே சாப்பாட்டு விஷயத்தில் சற்றே ஜாக்கிரதையாய் இருந்துட்டா போதும். ஆரோக்யம் அற்புதமாய் இருக்கும். ஆரோக்யத்தைக் கெடுக்கும் தீய பழக்கங்களுக்கு உங்களை நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை எழுதிக் கையெழுத்துப் போட்டு பூட்டுப் போட்டு வெச்சுடுங்க. அப்பதான் அது உங்களுக்கு மறக்கவே செய்யாது.