வார ராசிபலன்: 03.05.2019 முதல் 09.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்   

 முன்னெல்லாம், ”ஃப்ரெண்ட்ஸ்தான் எல்லாமே” என்று நீங்க சொன்னபோது மற்றவர் களுக்கு அது கேலியாய் இருந்தது. ஆனால் இப்போது உங்கள் நண்பர்கள் மற்றும் சிநேகிதி களின் செயலைப் பார்த்து கேலிபேசியவர்களெல்லாம் பதில் இல்லாமல் தவிப்பாங்க குடும்பத்தினர். ஏன்னா நன்மை அவங்களுக்காச்சே. தன்னம்பிக்கை கிராம் என்ன விலை என்று கேட்கும்படி இருந்த காலம் மாறி இப்ப நீங்க மைக் பிடிச்சுத் தன்னம்பிக்கை பிரசாரம் செய்ய ஆரம்பிப்பீங்க. மம்மி உணர்ச்சி வசப்பட்டு “என் செல்லம்” என்று புகழ்வாங்க.  நல்ல நேரம் நடக்குது. எல்லாம் டக் டக்கென்று வெற்றிகரமாய் முடியும். எவ்ளோ நன்மை நடந்தாலும் கிடைக்காததற்குத்தானே ஏங்கும் மனித மனம்? நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?

ரிஷபம்

சாப்பிடவும் பாராட்டுக்களை  டெலிவரி செய்யவும் மட்டும் வாயைத் திறங்க போதும். நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வர். அவர்களால் உதவிகள் காத்திருக்கின்றன. சிறு தடைகளுக்குப் பின்பே எதுவும் நிறைவேறும். நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சிறு தியாகங்கள் செய்ய வேண்டி வரும். ரொம்ப காலமா புது வண்டி வாங்கணும்னு ஆசைப் பட்டுக்கிட்டிருந்தீங்க. ஹப்பாடா. எண்ணம் நிறைவேறப் போகுது. ஆரோக்யத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாமே. குறிப்பாய் வயிற்றைக்  கெடுத்துக்கக்கூடாதுன்னு மனசுக்கு ஒரு ஆர்டர் போட்டுடுங்க. வியாபாரிகள் மனம் தளர வேண்டாம், இந்த வாரம் லாபகரமானது.  சரியா?

மிதுனம்

திருமணத்துக்குக் காத்திருந்தவங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஓயாம ‘சாட்’ செய்ய ஆரம்பிச் சுடுவீங்க. அப்பா பற்றி டென்ஷனைத் தூக்கிப்போடுங்க. நீங்க பூதக்கண்ணாடி வெச்சுப் பெரிதாக்கிப் பார்க்குமளவு பிரச்சனை ஒண்ணும் பெரிசில்லை. அப்பாவே உங்கள் தலையைத் தடவி “ஒண்ணும் பயப்படுவதற்கில்லை” ன்னு சிரிச்சுக்கிட்டே ஆறுதல் சொல்வாரு. ஓ கே தானே? யாருடைய எந்த விவகாரத்திலும் உங்கள் அழகிய மூக்கை நுழைக்க வேண்டாம். அமைதி காக்க வேண்டிய கால கட்டம் இது. மறந்துவிடாதீர்கள். பொறுமை என்று நூறு வாட்டி மனசுக்குள் இம்போசிஷன் எழுதிக்குங்க. வாகனம் வாங்கும் விவகாரம்ஸை சற்றே பொறுமையாய் டீல் செய்யுங்கப்பா .. ப்ளீஸ்.

கடகம்

வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கடுமையான உழைப்பும் முனைந்து வேலை செய்யும் பொறுப்புணர்வும் செம நல்ல பெயர் வாங்கித்தரும். அவார்ட் ரிவார்ட் வந்தாலும் வியப்பில்லை. ஒரே நாளில் அலுவலகதில் ஸ்டார் ஆயிடுவீங்க. கங்கிராட்ஸ். நண்பர்கள் எதிரிகளாகலாம். மிக கவனமாயிருங்க. சக்திக்கு மீறி நடந்து உங்களை சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவுங்கள் போதும். கடுகு வாங்கும் ஸ்பீடில் வீடு வாங்கணுமா என்ன? தயவு செய்து விவரம் தெரிஞ்சவங்க… விஷயம் தெரிஞ்சவங்களை உங்களுடன் அழைச்சுக்கிட்டு போயி.. பத்திரங்கள் சரியாக உள்ளதான்னு அலசிப்பாருங்க. பிறகு பணம் கொடுங்க.

சிம்மம்

கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்த டென்ஷன்ஸ் டாட்டா பை பை என்று சொல்லி நகரும். மனசை ஒருவித அமைதி (அதென்ன ஒருவித? எல்லாவித அமைதியும்தான்) ஆட்கொள்ளும். வெளியூர் வெளிநாடு என்று சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் ஓரிடத்தில் நிலை கொள்ளும். சுதாரிச்சுக்குங்க. என்றைக்குமே நண்பர்களை உயிராய் மதிக்கும் நபர் நீங்க.  வாகன விவகாரங்கள் அநியாயத்துக்குத் தாமதமாகும். எனினும் ரிசல்ட் நன்மையே. மம்மி மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை அவங்களும் புரிஞ்சுக்க வேண்டாமாங்க? செயலில் காட்டுங்க. குழந்தைகள்  மேடை ஏறிப் பரிசும் பாராட்டும்  பெறுவாங்க.

கன்னி

ஆமை நத்தையையெல்லாம் காப்பியடிச்சுக்கிட்டுப்  போய்க்கொண்டிருந்த உங்களோட அலுவலக வாழ்க்கை இப்போது மெல்ல மெல்ல  வேகம் பிடிச்சு சீக்கிரத்தில் பாகுபலி  குதிரை வேகத்தை எட்டும். புது வேலை  மாறணுமா? ப்ளீஸ்.. வெயிட் வெயிட். இத்தனை காலம் பொறுமை அடை காத்தீங்க. அது பொன்முட்டை. இன்னும் கொஞ்சநாள் காத்திருங்க. குறிப்பா  வெளிநாட்டு வேலை ஷ்யூராக் கிடைக்குமுங்க. எந்த விஷயமும் உங்கள் கையை மீறிப் போகாது. நீங்க  பிசிஸ் செய்பவரா? எனில் பங்குதாரருடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். எனினும் அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை. பொருளாதார வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் :  03.05.2019 முதல் 05.05.2019 வரை

துலாம்

கலைத் துறையினருக்குச் சிறப்புகள் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும், பார்ட்டிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு வரும் . குடும்ப நலம் சிறக்கும். பண வரவு சற்று அதிகரிக்கும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். உங்களின் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். ஆனால் அது பற்றித் தேவையில்லாத மனக்குறை உள்ளது உங்களுக்கு.  அது எதுக்குங்க? தூக்கி உடைப்பில் போடுங்க. கணவருடன் / மனைவியுடன் நல்லவிதமாய்த்தான் பேச வேண்டும் என்று ஒரு உறுதியான தீர்மானம் செய்துகிட்ட பிறகுதான் வாயே திறக்கணும். முடிந்தால் பாராட்டினால் இன்னும் சிறப்பு. அவருடைய பெருமையை உணர்ந்து நீங்களே வியந்து பாராட்டும் நாள் இதோ வந்தாச்சு.

சந்திராஷ்டமம் :  05.05.2019 முதல் 08.05.2019 வரை

விருச்சிகம்

யாரிடமும் வம்பு வழக்கு வேண்டாம். வீண் பழி ஏற்படாதபடி நடந்து கொள்ளுங்கள்.  நீங்கள் யாரைப் பற்றி டென்ஷன் ஆனீங்களோ அந்தக் குழந்தைகள் நன்மையடைவாங்க. புத்திசாலித்தனத்தை நிரூபிக்க அவங்களுக்கு நேரம் வந்தாச். உங்களுடைய தந்தை வெளிநாடு போய் வங்கியில் பணம் சேர்ப்பார். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். திரவப் பொருட்கள் லாபம் தரும் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். உங்கள் கணவரை / மனைவியை என்னமோ சாதாரணம்னு நினைச்சுக்கிட்டு எல்லார்கிட்டயும் விட்டுக்கொடுத்துப் பேசிக்கிட்டிருந்தீ நீங்க “அடடே. தப்பு செய்துட்டேனே” ன்னு நினைக்கும்படி ஜமாய்க்கப்போகிறார் பாருங்க.

சந்திராஷ்டமம் :  08.05.2019 முதல் 10.05.2019 வரை

தனுசு

அலைச்சல் அதிகமாகும். ஆனால் அதற்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத வருமானமும், லாபமும் கிடைக்கும். குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொறுப்புள்ளவங்களா ஆவாங்க. டென்ஷனை டெலிட் செய்ங்க. நண்பர்கள் இன்றைக்கு உத்தமர்களாயும் நாளைக்கு ராட்சஸர்களாயும் தெரிவாங்க. இரண்டுமே இல்லை. அவங்க எப்பவும் போல இயல்பாய்த்தான் இருக்காங்க. அலுவல் பற்றியும் குழந்தைகள் பற்றியும் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். அதை மண்டையில் ஏற்றிக்கொள்வீங்களா என்ன? அடப்போங்க. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும்

மகரம்

வெளிநாடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வருமானம் அல்லது லாபம் வரும். அலுவலகத் தில் சம்பளம் உயரும். எதிர்பாராத லாபமும் வரும். உங்கள் புத்திசாலித்தனத்தை இன்னமும் நீங்களே முழுசாப் பயன்படுத்தாமல் வீடியோ கேம் விளையாடிக்கிட்டிருந்தால் மற்றவர்கள் எப்படிஉணர்வாங்க? பேச்சில் திறமை வெளிப்படும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் இத்தனை இனிமையை எங்கே ஒளிச்சு வெச்சிருந்தீங்க. “இவ(ங்க) எப்பவுமே இப்டி இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்?” என்று ஏங்கப் போறாங்களே உங்களைச் சேர்ந்தவங்க. வேலை சம்பந்தப்பட்ட எல்லாமே கொஞ்சம் நின்று நிதானிச்சுத்தான் போகும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆவாதீங்க. ஏதோ வண்டி நிக்காம ஓடுதேன்னு சந்தோஷப்படுங்க.

கும்பம்

ரெடி ஒன்.. டூ.. த்ரீ.. பாஸ்போர்ட் வாங்கிய மூன்றாவது நிமிஷம் விசா மனு செய்து.. மூன்றாவது வாரம் விசா கிடைத்து .. மூன்றாவது நாள் ஏர்போர்ட்டில் செக் இன்.தயாரா இருங்க. தலைமைப்பதவி ஏற்க வேண்டிவரும். குடும்பத் தலைவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகும். பொது சேவைகளில் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் நடந்து அவற்றை நீங்களே சரிசெய்துவிடுவீர்கள்.  பெரியவர்களும் பணக்காரர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய டிரஸ்கள் மற்றும் கைகள் சேரும். குடும்ப நலம் சிறக்கும் அரசாங்க உத்யோகம் லாபம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.  

மீனம்

எந்தவிதச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.  மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலை உயரும். நம் ஆரோக்யத்துக்கு எப்பவும் எந்தப் பிரச்சினையும் வராது என்ற மூட நம்பிக்கையை மூட்டை கட்டிப் பக்கத்தில் உள் நீர்நிலையில் தூக்கிப் போடுங்க. உத்யோக விஷயத்தில் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும், மருத்துவர்களுக்கும்  கட்டடத் துறையினருக்கும் லாபம்ஸ். கடன் தொல்லை குறையும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உங்கள் காதல் வாழ்க்கை சந்தோஷம் அளிக்கும். திருமணம் நிச்சயமாகும். இந்த வருடம் தொட்டதெல்லாம் துலங்கும் முயற்சிகள் கைகூடும். குடும்பத்திலும் அக்கம்பக்கத்திலும் ஒற்றுமை நிலவும். உங்கள் பங்கும் அதில் இருக்கும்.

கார்ட்டூன் கேலரி