வார ராசிபலன் 03.112017 to 09. 11.2017 – வேதா கோபாலன்

மேஷம்

வெளிநாட்டில் புது ஜாப் கிடைக்கப்போகுதுங்க. அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். இந்த வாரம் நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாவார். தன்னம்பிக்கையை வளர்த்துக்  கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ கட்டி சேரணுங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  ஆரஞ்சு அல்லது பிங்க் நிறம் உபயோகியுங்க.

ரிஷபம்

வேலை பளு இருக்கும்தான். அது நீங்கள் புலம்பிப் பொருட்படுத்தும் அளவுக்கு இருக்காது. புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும். அப்புறம் அசடு வழிய வேண்டாம். இப்பவே நிம்மதியை அதிகரிச்சுக்குங்க. கடந்த ஒன்றரை வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்த போயிருந்தது. இப்போதான் அது நினைவுக்கு வரும்!

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் நிறம் உபயோகியுங்க

மிதுனம்

தொட்டிலுக்குத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. ஊருக்கெல்லாம் நல்லவங்களா இருக்கீங்களே. வீட்டுக்குள்ளும் நல்ல பெயர் எடுங்களேன்! நிறைய ஆடை அணி மணி களும் நகை வகைகளும் வாங்கப் போறீங்க. சகோதர சகோதரிகளின் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். அதில் நீங்களும் கலந்துகொண்டு நல்ல பெயர் எடுப்பீங்க. வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண்டாம். முன்பைவிட இப்போ அதிருஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா?

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பளிச்சென்று கண்ணைக் கவரும் வெள்ளையை  உபயோகியுங்க.

கடகம்

உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் இந்த வாரம் நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு அவரின் வழி காட்டுதல் பெரிய தூண்டுதலாக இருக்கும். வெற்றிகரமான வாரம் இது. கோபத்துக்கு வழியே கொடுக்காதீங்க. எந்தச் சூழலிலும்…யார் உங்களுக்கு டென்ஷன் ஊட்ட முயற்சித்தா லும் கம்மென்றிருங்கள். பொறுமைக்குப் பரிசு அடுத்த பஸ்ஸில் வந்து கொண்டே இருக்கும். கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வார் மேம். அதிருஷ்டம்தான் போங்க

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மஞ்சள் நிறம் உபயோகியுங்க.

சிம்மம்

உங்க அதிருஷ்டம் எல்லோரும் உங்களை அனுசரிச்சுக்கிட்டுத்தானேம்மா போறாங்க. அதுநிலைக்க வேணாமா? சாப்பாட்டு விஷயத்தில் அதி ஜாக்கிரதையா இருங்க. கணவருக்கு/ மனைவிக்குப் பல வித நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷப்படப் போறீங்க அல்லது குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாவாங்க. பின் விளைவுகளை யோசித்துப்  பேச  வேண்டாமா?  (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…). வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா?

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகியுங்க

கன்னி

சில பெரிய பொறுப்புக்களை நீங்க சுமந்து நடத்த வேண்டியிருக்கும். ஆபீஸ், வீடு, பள்ளிக்கூடம், கல்லூரி என்று உங்கள் சம்பந்தப்பட்ட இடம் எதுவானாலும் அதில் நீங்கள் பொறுப்பை வெற்றிகரமாக நிறை வேற்றிப் பாராட்டுப் பெறுவீங்க. தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும்மா. குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்மா . சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும் – வைசி வெர்சா. கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 3 முதல் நவ 5 வரை

துலாம்

சகோதரர்களுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லைன்னாலும் பிரச்சினை இருக்காது, விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அபார வெற்றி குவிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவுவதால் நிம்மதியாக தூக்கம் வரும். குழந்தைகள் பேக்கெட் பேக்கெட்டாக சந்தோஷத்தை அளிப்பார்கள். இந்த வாரம் அமோக விளைச்சல் உண்டு. வேறு வேலை மாறத் திட்டமிட்டிருந்தால் நடக்கும், நமக்கு மிஞ்சி யாரும் இல்லைன்னு தன்னம்பிக்கையோட நினையுங்க. நம்மை மிஞ்ச யாரும் இல்லைன்னு கர்வத்தோட நினைக்காதீங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மெரூன் நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 5 முதல் நவ 7 வரை

விருச்சிகம்

நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் திருமணம் அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து ரேஷன் கார்டில் இடம் கேட்பார்கள். ஜாக்கிரதைங்க.. நண்பர்களா பகைவர்களா என்று கொஞ்சம் சோதிச்சுப் ப்பார்த்துப் பழகுங்கம்மா. குறிப்பாக எதிர்பாலினத்தினரை. இப்போது இருக்கும் வேலையையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அலைபாயுதே கண்ணா என்று தடுமாற வேண்டாம்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் சிவப்பு நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 7 முதல் நவ 9 வரை

தனுசு

உடல் நலம் நன்றாகவே இருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். எதற்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்ல முறையில் முடிஞ்சிடுச்சா?. நிம்மதியா? ஹம்மாடி. உழைப்புக்கு வெற்றி உண்டு. முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்க. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஊதா நிறம் உபயோகியுங்க.

மகரம்

லுவலகத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையை அணியுங்களேன். எல்லாம் சீக்கிரத்தில் சரியாகும். மச்சம்தான் போங்க ஒங்களுக்கு…. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு. வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வந்து அணைத்துக் கொள்ளும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மெரூன் நிறம் உபயோகியுங்க.

கும்பம்

கவர்ச்சி அம்சம் மேம்படும். காதல் வளரும். சிரமம் வருவது போல் தோன்றி எல்லாம் தலைப்பாகையோடு போகும்போது அப்பாடான்னு ஆகும். புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்கம்மா. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் அணுகும் முறையில் சிறந்த பக்குவம் உள்ள உங்களுக்கு அலுவலகத்தில் மேலும் சிறந்த நற்பெயர்கள் கிடைக்கும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் இள மஞ்சள் கலர் உபயோகியுங்க.

மீனம்

வார்த்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாற்றி வாக்கினால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதே அதுக்கே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டாமோ! ஆனா அதுக்கு நீங்க உழைப்பது கொஞ்சமா நஞ்சமா? அலுவலகத்தில் பொறுப்புக்கு மேல் பொறுப்பு சுமத்தினாலும் புன்னகையுடன் சமாளிக்கும் குணம் உள்ள நீங்க அனைவரையும் கவர்வீங்க!

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க.