Random image

வார ராசி பலன் 01-01-18 முதல் 11-01-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

படிப்புக்காக வெளிநாடு போறதா இருந்தீங்களா? வெற்றிதன். நீங்க பயந்த விஷயங்களை அநாயாசமாய் எதிர்கொள்வீங்க. பேச்சினால் மற்றவர்களை வெற்றிகொள்வீங்க. குறிப்பாய் அலுவலகத்தில் உங்க பேச்சினாலேயே பிசினஸ் முன்னேற்றம் ஏற்பட்டுப் பாராட்டும் புகழும் கிடைக்கும். மேலதிகாரிக்குச் செல்லமாவீங்க. மாணவர்களுக்கு மேலும் முன்னேற்றம் இருக்கும். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கக்கொஞ்சம் தாமதமானாலும் சூப்பர் வேலை சீக்கிரம் கிடைக்கப்போகுதுங்க.

ரிஷபம்

மனசில் நினைச்சிருந்த விஷயங்கள் ஒவ்வொண்ணா நிறைவேறிக்கிட்டே வரும். அதே சமயம் சின்னச்சின்ன டென்ஷன்களும் கவலைகளும் முளைச்சுக்கிட்டே இருக்கும். கவலையே வேண்டாம். சிம்ப்பிளா சமாளிச்சு நிமிர்வீங்க. நீங்க நினைக்கற அளவுக்கு அதுவெல்லாம்  பெரிய பிரச்சினையே இல்லைங்க. மனைவி/ கணவர் உங்களைப் புரிஞ்சுக்கலையா? வெயிட் பண்ணுங்க. முதல்ல அவங்களை நீங்க புரிஞ்சுக்குங்க. நண்பர்கள் பெரிய அளவில் உதவுவாங்க. வேலை பற்றிய பயம் என்னிக்கும் வேண்டாம். எல்லாம் நல்லபடியா இருக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் என்னிக்குமே இருக்கும் சலசலப்புதானே இன்னிக்கும் இருக்கு? புதுசாய் ஏன் டென்ஷன்?  எனிவே.. மற்ற விஷயங்கள் உற்சாகமாய்த்தாங்க இருக்கும்., நல்ல நல்ல பயணங்கள் மேற்கொள்ளப்போறீங்க. கோயில் குளம்னு செலவு செய்வீங்க. புதுசா கார் புக் செய்திருக்கீங்களா? வாவ். அந்த வண்டி உங்களுக்கு ரொம்பவும் ராசியா இருக்கும். அலுவலகத்தில்  வேலை  பெண்டு நிமிரும். வேற வழியில்லை. பாராட்டு .. புகழ்… அவார்டு .. ரிவார்ட்டு எல்லாம் கிடைக்கும்போது  அந்த பெண்டு சரியாயிடும்.

கடகம்

அம்மா கிட்டேயிருந்து அன்பளிப்பும் பரிசுகளும் கிடைக்கும். சிலருக்கு அம்மா வழியில் சொத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. கோப தாபங்களையும் அவசப்போக்கையும் கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. கற்பனையிலேயே வாழக்கூடிய நீங்க கொஞ்ச நாளாய்க் கற்பனையிலேயே பயங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கிட்டிருக்கீங்களே இது நியாயமா? சும்மா விடுங்க. எதுவும் பிரச்சினையாகாது. உங்க அதிகாரத்திற்குக் கீழே இருக்கறவங்க கொஞ்சம் கொஞ்சமா உங்க வழிக்கு வருவாங்க. நிம்மதி அதிகரிக்கும்

சிம்மம்

தனிமையில் கொஞ்ச காலம் சிரமப்பட்டுட்டீங்க. இனிமேல் அந்த நிலைமை மாறும். மனசுக்குப் பிடிச்சவங்களின் துணையும் உதவியும் இதோ கிடைச்சாச்சு.  எதை எடுத்தாலும் கை நழுவிப்போய்க்கொண்டே இருந்த நிலைமை மாறி எல்லாமே வெற்றியாய் முடியும். நம்ம வேண்டாதவங்களை நம்பினீங்க. டோன்ட் ஒர்ரி. பாடம் கத்துக்கிட்டீங்க. ஒதுங்கிட்டீங்க. இனி பிரச்சினை இல்லை. வெல் விஷர்களின் பேச்சைக் கேட்டு உருப்பட ஆரம்பித்துவிட்டீங்க. மகிழ்ச்சியாய்… ஜாலியாய்ப் பொழுது போகும். என்ஜாய். புது வேலை  கிடைக்கும். மிகவும் விரும்பத்தக்க பணியாய் அது இருக்கும். கங்கிராட்ஸ்.

கன்னி

எத்தனை முறை எவ்வளவு விஷயங்கள் முயன்று முயன்று  நடக்காம  போச்சு? அப்பாடா..  இப்பதான் விடிவுகாலம் பிறந்துச்சு. என்றைக்கோ செய்த முயற்சிகளும் இப்ப பலிக்க ஆரம்பிச்சு சந்தோஷ வியப்பு அளிக்கும். நல்ல வேளை. உங்களுக்கு அடிப்படையில் ஒரு புத்திசாலித்தனமும் முயற்சிகளைக் கைவிடாத தன்மையும் உள்ளது.  அதுதான் உங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கு. குட் லக். குழந்தைகளால் ஏற்பட்ட சின்னச்சின்ன டென்ஷன்கள் எரேஸர் வெச்சு அழிச்சமாதிரிக் காணாமல் போகும். வியாபாரிகளுக்கு லாபம் கூ….டும்.

துலாம்

அப்பாடா. கவலைகள் தீர்ந்தன. டென்ஷன்கள் முடிந்தன. இப்ப எதுக்கு சின்னதாய் (பெரிசாய்) பயந்துக்கிட்டிருக்கீங்களோ அதெல்லாமும் சரியாகும். தன்னிச்சையாய் சரியாகும். அந்த வீண் பயங்களையெல்லாம் எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்தக் குப்பைத் தொட்டியையும் எடுத்துக் கடலில் போட்டுடுங்க. குழந்தைகள் பற்றிச் சின்னச்சின்ன பயங்களும் கவலைகளும் இருக்கும். எல்லாமே சரியாகும். யார் மீதாவது கோபங்கள் இருந்தால் டெலீட் செய்துடுங்க. அவங்களால உங்களுக்கு எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டன என்பதையும் ஏற்படப்போகின்றன என்பதையும் நன்றாய் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

சின்னதாய் விரக்தியோ.. மத்தவங்க மேல வெறுப்போ வந்தால் அதுக்கு வேற யாருமே காரணம் இல்லை. நீங்கதான். நீங்களேதான் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. புதிய வியாபாரம் துவங்கவோ புது வேலைக்கு மாறவோ இது சமயமல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்படி அவசரமோ அவசியமோ நேர்ந்தால் ஜாதகத்தைக்கொண்டுபோய் ஒரு நல்ல ஜோசியர்கிட்ட காண்பிச்சு அவர் பச்சை சிக்னல் காண்பிச்சா உங்களுக்கு வேண்டி யவர்களையும் இந்த விஷயங்களில் அனுபவம் உண்ணவங்களையும் கன்சல்ட் செய்து நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து பிறகு தாராளமா இறங்குங்க.

தனுசு

புதிய ஒப்பந்தங்கள்  கொஞ்ச காலமாய்க் கிடப்பில் இருந்தன.. அல்லது தாமதமாகிக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தன. இப்ப மடமடன்னு எல்லாம் சீட்டுக்கட்டு மாதிரி மடியில் வந்து விழும். சந்தோஷம் படிப்படியாய் உயர்ந்து நிம்மதி அளிக்கும். ஒரு சின்ன தாமதம் பொது வாய் எல்லா விஷயங்களிலும் இருந்து கொண்டே இருக்கும். காரணம் உங்களுக்கே தெரியும். இட்ஸ் ஆல் ரைட். அதை எதிர்பார்த்துத்தான் நீங்களும் அடிஎடுத்து வைக்கறீங்க. எனவே நோ பிராப்ளம். மனசு தயாராய் இருப்பதால் பயமோ கவலையோ இருக்காது. முடிவும் சுபமே.

மகரம்

எல்லாரும் பயமுறுத்திய அளவு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று  மனசில் நிம்மதி படரும். பொதுவாகவே உங்கள் உழைப்பு எல்லாமே ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் பலன் தரும். இந்த உழைப்புக்கே இத்தனை பலன் என்றால் நீங்க சோம்பல் என்னும் போர்வையைத் தூக்கிப்போட்டுவிட்டு முழு மூச்சாய் உங்க கடமைகளைச் செய்தால் எவ்ளோ வெற்றி கிடைக்கும். பொழுது போக்குகளை முழு நேரப்பணி மாதிரி செய்யாதீங்க. உங்கள் முனைப்பும் உழைப்பும் உங்களுக்குப் பெரு வெற்றி அளிக்கும்னு புரிஞ்சுக்கிட்டு செயல்படுங்க .. ப்ளீஸ.. யாருடைய நன்மைக்காக சொல்றேன்? உங்க நன்மைக்குத்தானே?

சந்திராஷ்டமம்: ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை

கும்பம்

விடியல் என்றால் இதுதான். இருளும் பயமும் சூழ்ந்த இரவெல்லாம்  போயே போச்சு. இனி எல்லாம் நலமே. எந்தெந்த நல்ல விஷயங்கள் இத்தனை காலம் தள்ளிப்போயிக்கிட்டே இருந்துச்சோ அதுவெல்லாம் இப்போ கைகூடும். உங்களைக் கண்டுக்காம அலட்சியம் செய்துட்டுப் போனவங்க எல்லாம் இப்போ வந்து உங்களை விசாரிப்பாங்க. காரணம் உங்க வெற்றியும் சுபிட்சமும். போயிட்டுப் போறாங்க. மன்னிச்சுடுங்க. அரசியலில் புதுசாக ஈடுபடும் எண்ணம் இருந்தால் ஜாதகப்படி நல்ல நேரமா என்று பார்த்துக்குங்க. மற்றபடி வழக்குகளில் நீங்களாய்ப் போய் மாட்டிக்காதீங்க.

சந்திராஷ்டமம்: ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை

மீனம்

குழந்தைங்க வாழ்வு பற்றி இருந்துவந்த பயங்கள் அநாவசியமானவை. டோன்ட் ஒர்ரி. எல்லாம் நல்லபடியாவே இருப்பாங்க. குடும்பத்தோடு குதூகலமாய் நாலு இடம் போயிட்டு வருவீங்க. என்ஜாய். ஏராளமான வேலைப் பளு இருக்கும். அதுவும் உங்களுக்கு ரசிச்சு செய்யும்படியா இருக்கும். வெளிநாட்டில் இருப்பவங்களுக்கும் நல்ல செய்தி வரும். உள்நாட்டில் உள்ளவங்களுக்கும் வெளிநாட்டு உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்ஸ் வரும். சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சினைகளை நீங்க என்னிக்குமே பெரிசா நினைக்காதவர் என்பதால் கவலை விட்டுது.

சந்திராஷ்டமம்: ஜனவரி 9 முதல் ஜனவரி 12 வரை