Random image

வார ராசிபலன்: 07.09.2018 முதல் 13.09.2018 வரை – வேதா கோபாலன்

மேஷம்

புதுசா அக்ரீமென்ட் போட்டு, புது வேலையில் உட்கார்ந்து உடனடிப் பாராட்டு உத்தரவாதமா வாங்குவீங்க. சின்னச்சின்ன உடல் நலக்குறைவுகள் உங்களைவிட்டு ஓடியே போகும். மன உளைச்சல்களைவிட்டு நீங்க ஓடியே வந்துடுவீங்க. அலுவலகத்திலோ, வீட்டிலோ, புத்திசாலித்தனமான முயற்சிகள், பேச்சு நடவடிக்கை மூலம் பெருமையும் நன்மையும் கிடைக்கம். பிசினஸ் முயற்சிகள் சாதகமாக முடியும். மனசில் உள்ள கற்பனை பயங்களை விட்டொழியுங்க. உங்களின் கவரும் தன்மை அதிகரிக்கும். செல்வாக்கு அதைவிடவும் ஜாஸ்தியாகுமே. வெளிநாட்டுக்குப் போய் மேல்படிப்புப் படிக்க ஆசைப்பட்டவங்களுக்கு சூப்பர் வெற்றிதான்.

ரிஷபம்

என்றைக்கோ எதிர்பார்த்த நன்மை ஒரு வழியா உங்களைத் தேடி வந்து மடியில் உட்காரும், சின்னச் சின்ன உடல் உபாதைகளிலிருந்து மீண்டுவிட்டீர்கள். பயம் வேணாங்க. உங்கள் குழந்தைகள் வெளிநாடு சென்று வெற்றியடைவார்கள். வரலாறு காணாத செலவு ஏற்பட்டாலும் அதற்கெல்லாம் அசருகிற நபரா நீங்க? வெளுத்துக் கட்டுங்க. ஏன் அசர மாட்டீங்க தெரியுமா? அத்தனையும் சந்தோஷம் தரும் செலவுங்களாவும் சுப காரியத்துக்கான விரயங்களாவும் இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கீங்களா? அம்மா அப்பாவிடமிருந்து நல்ல தகவல்ஸ் வந்து உங்களை ஜாலி டான்ஸ் பண்ண வைக்கும்.

மிதுனம்

தந்தை பிரபலமாவார். பலரால் பாராட்டப்படுவார். அவர் கலைத்துறையைச் சேர்ந்தவராக இருந்தால் மேடையில் வெற்றியைக் கொண்டாடுவார்.  பல காலம் காத்திருந்த வெற்றி வாசல் கதவைத் தட்டும். குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வுகள் வரிசையா இருக்கு. அறிவிலும், ஆற்றலிலும், வயதிலும் பெரிய வங்களை சந்திச்சு ஆசி வாங்கவீங்க.  அவங்க உங்களைப் பாராட்டுவதுடன் உங்களால அவங்களுக்குக் கிடைச்ச நன்மைகளுக்கு மனதார நன்றி சொல்லுவாங்க. ஜமாயுங்க. வார்த்தைகளை ஸ்கேல் வெச்சு அளந்து பேசுங்க. மடமடன்னு ரிலீஸ் பண்ணிடாதீங்க.

கடகம்

தலைவலி, கண்பார்வை  பவர் மாற்றம் போன்ற விஷயங்கள் நடக்கலாம். அலட்சியம் செய்யாமல் உரிய சிகிச்சையை உடனடியாக எடுங்க. எல்லாம் சரியாகும். சில திடீர் நன்மைகள் உண்டாகும்.  முதல் நாள் வரை கனவிலும் எதிர்பார்க்காத சந்தோஷங்கள் மறுநாள் அலைஅலையாய் மகிழ்ச்சி தரும். நீண்ட பயணங்களுக்குத் தயாராகுங்க. பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுக்க வேண்டி வரலாம்.  ரெடியா? புது உத்யோகம் மாற வாய்ப்பிருக்கு. காத்திருந்ததற்குப் பலன் நல்லாவே இருக்கும். ஏற்கனவே உள்ள வேலையில் பதவியும் சம்பளமும் உயரும். குழந்தைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து  நன்மைகள் வரும்.

சிம்மம்

அலுவலகத்தில் திடீர் நிகழ்வு ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவர்/ மனைவி மிகவும் படித்தவராக வும் புத்திசாலியாகவும் மட்டுமன்றி உங்களை அனுசரிப்பவராகவும் அமைவார். மற்றவர்களின் கல்விக்கு நீங்கள்  செய்யும் உதவி அவர்களுக்கு மறக்க முடியாதபடி அமையும். அதிருஷ்டம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் தெரிந்து மகிழ்ச்சி அடைவீங்க. பாஸ்போர்ட் விவகாரங்கள் மிகவும் சுலபமாக முடியும். பல வித வருமானங்களும் லாபங்களும் ஒரே சமயத்தில் உங்க அட்ரஸ்ஸை விசாரிச்சுக்கிட்டு வரும். சட்டென்று ஒருவித கவர்ச்சி அம்சம் ஏற்பட்டு செய்யும் காரியங்களில் நேர்த்தி அதிகரிக்கும்.

கன்னி

காண்போர் தங்கள் மூக்கின் மீது  சுட்டுவிரலை வைத்து அதிசயப்படப்போகிறார்கள்  அப்படிப்பட்ட சாதனை ஒன்றைச் செய்வீங்க. மாணவராய் இருந்தால் ஆசிரியர்களின் பாராட்ஸ் வரைமுறையில்லாமல் கிடைக்கும். ஆரோக்யம் பற்றி ஏராளமாய்ப் பயந்தீங்க. ஆபரேஷன் இருக்கும்னு கூடக் கற்பனை செய்துக்கிட்டுத் தூக்கம் இழந்தீங்க. இப்போ அப்படியெல்லாம் நடுங்குமளவுக்கு எதுவும் ஆகிடலைன்னு நிம்மதியாயிடுச்சா? ஹப்பாடா. பேச்சினாலேயே அனைவரையும் வசப்படுத்தி, அந்தப் பேச்சினாலேயே வெற்றியை வளைச்சு உங்க வசப்படுத்திப்பீங்க.

துலாம்

நீங்க பெத்த ரத்தினங்கள்,  தங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றிபெற்று உங்களுக்கு மகிழ்ச்சியும் கர்வமும் அளிப்பாங்க. மம்மியின் தலைக்கு வந்தது  ‘கேப்‘ போட போகுங்க. கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதலும் சந்தோஷ இணக்கமும் நல்லாவே இருக்குமுங்க. கடன் வாங்க வேண்டியிருந்தால் அது பற்றிப் பல முறை யோசியுங்கள். அவசரம் வேண்டாம்.  மெதுவாகத்தான் அடையும். படிப்பு சம்பந்தமான செலவுகள் ஏற்படும். மகன், மகள், நெருங்கிய உறவினர் போன்றவர்களுக்கு உதவுவீங்க. திருமணம் உடனே நடக்கும். குடும்பங்கள் இணைய உதவுவீங்க. பாராட்டும் நன்றியும் கிடைக்கும்.

விருச்சிகம்

புதுப்புது லாபங்கள் வரும். நிறைய லாபம்தான், கங்கிராட்ஸ்… பல மாதங்களாய் ஏங்கிக் காத்திருந்த நன்மைகள் இதோ கண்ணில் தெரியுது. சகோதரர்களுக்கு சிகிச்சை செலவுகள் இருந்தாலும், அவங்க நல்லபடியா எழுந்து நடமாடி சந்தோஷமா மீளுவாங்க. உங்களுக்குத் திருமண வேளை வந்தாச்சு… வந்தாச்சு. புத்திசாலித்தனமான பேச்சினால் வெற்றியடைவீர்கள். தந்தைக்குப் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். அதனால் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி இருக்கும். ஜாலியா எல்லாரும் வெளியே சுற்றுவீங்க. நீங்களே எதிர்பார்க்காத வேகத்தில் கடன்கள் அடையும்.

தனுசு

எங்கும் நிதானம் எதிலும் நிதானம் என்று போகிறதே என்று பரபரத்து என்ன பயன்? முயற்சிகளை அதிகரியுங்க. இந்த சோம்பல் சோம்பல்னு ஒரு விஷயம் இருக்கே…அந்த சமாசாரம் உங்களை அண்டாமல் குச்சியை ஓங்கி விரட்டுங்க. கணவருடன் / மனைவியுடன் வெளிநாடுங்களுக்கெல்லாம் போவீங்க. திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் கட்டாயம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பேச்சினால் நல்ல முறையில் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினருக்கும் நன்மைகள் ஏற்படும். ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்க வழக்கம் இருந்தாலும் அதிலிருந்து உடனே மீண்டுவிடுவது உங்களுக்கு நல்லதுங்க. இதுதான் அந்தத் தீர்மானத்துக்கு உரிய மற்றும் உகந்த நேரம். ஆமாம் . சொல்லிட்டேன்.

சந்திராஷ்டமம் : 06.09.2018 முதல் 08.09.2018 வரை

மகரம்

ஆரோக்யத்தில் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பேச்சு வார்த்தையினாலேயே பிரச்சினைகள் தீரும். உங்களுக்கோ உங்கள் கணவருக்கோ/ மனைவிக்கோ இத்தனை காலம் இருந்து வந்த ஆரோக்யப் பிரச்சினைகள் தீரும். பாராட்டுக் கிடைக்கும். புகழ் இன்கிரீஸ் ஆகும். உடனே தலை கிறுகிறுக்க விரும்பும்.  அதற்கு அனுமதி மறுத்துடுங்க.  பயங்கரமாக நீங்க கற்பனை செய்துக்கிட்டிருந்த ஆரோக்யப் பிரச்சினைகள் சிம்ப்பிளா முடிஞ்சுடும். ஃபாரின் சென்று வெற்றிகரமாகத் திரும்புவீங்க. அலுவலகத்தில் உங்களின் புகழ் மட்டுமன்றி முக்கியத்துவதும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 08.09.2018 முதல் 10.09.2018 வரை

கும்பம்

உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் ஆரோக்யம் அருமையாக இருக்கும்.  உங்களுக்குத் தெரிந்த குடும்பங்களில் கணவருக்கு/ மனைவிக்கு நன்மை ஏற்படுத்தித் தருவீங்க. குடும்பத்தில் யாருக்கேனும் கல்யாணம் நிச்சயமாகும். திருமணமாகி குழந்தை பிறக்கலைன்னு டென்ஷன் ஆகிக்கிட்டிருக்கறவங்களுக்கு இதோ, நல்ல செய்தி காத்துக்கிட்டிருக்கு. வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் நன்மை உண்டாகும்.  நண்பர்களுக்குப் பாராட்டும் பெருமிதமும் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் சற்று நிதானப்போக்கு இருந்தால் சற்றே பொறுமையாய் இருங்கள். அது குழந்தைகளின் குற்றமில்லை. இதோ சீக்கிரத்தில் எல்லாமும் சரியாகும். டோன்ட் ஒர்ரி.

சந்திராஷ்டமம் : 10.09.2018 முதல் 12.09.2018 வரை

மீனம்

ஹப்பாடா. இது போன்ற மன நிம்மதியை அனுபவிச்சு எவ்ளோ நாளாச்சு என்று நீங்களே உங்களைக் கண்ணாடியில் பார்த்துச் சொல்லிப் பெருமிதம் அடைவீங்க. பிரார்த்தனைகள் நிறைவேறும். வளர்ந்த குழந்தைகளாக..திருமண வயதில் இருப்பவர்களாக , அவர்கள் விருப்பப்பட்டவரை மகிழ்ச்சியுடனும் உங்கள் ஆசியுடனும் கைப்பிடிப்பார். அரசாங்க உதவியுடன் கல்வி கற்க வசதி கிடைக்கும். அப்பாவுக்கு நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் அதிருஷ்டமும் வேலையில்  முன்னேற்றமும், பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் (அம்மாடி. எவ்ளோ பெரிய லிஸ்ட்!)

சந்திராஷ்டமம் : 12.09.2018 முதல் 14.09.2018 வரை